கலிங்கப்பட்டினம் கடற்கரை

கலிங்கப்பட்டினம் கடற்கரை என்பது ஆந்திர மாநிலம் சிறீகாக்குளம் மாவட்டத்தில் வம்சதாரா ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கடற்கரை சிறீகாகுளம் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

நிர்வாகம் தொகு

ஆந்திரப் பிரதேச மாநில அரசின் ஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (APTDC) இந்தக் கடற்கரையை சுற்றுலா மையமாக அங்கீகரித்து இதன் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.[1] 

முக்கியத்துவம் தொகு

இதுவொரு பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட துறைமுகம் ஆகும். இங்கு ஒரு கலங்கரை விளக்கமும் உள்ளது. இத்துறைமுகத்தில் வாசனைத் திரவியங்கள், துணிகள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. இத்துறைமுகம் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு ஆட்சியின் போது மூடப்பட்டது. .[2][3]  இந்தக் கடற்கரைக்குச் செல்லும் சாலை கடற்கரைப் படுகை வரை செல்வதால் அது திறந்த சாலைக் கடல் (Open Road Sea)  என அழைக்கப்படுகிறது.[4]

 
கலிங்கப்பட்டினத்திலுள்ள கலங்கரை விளக்கு

மேற்கோள்கள் தொகு

  1. "Kalingapatnam Beach". AP Tourism Portal. Archived from the original on 8 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Beach overview". discoveredindia. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014.
  3. "Famous beaches in Andhra Pradesh". indiatemplesinfo. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
  4. "Tourist-Srikakulam". incredibleap. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)