கலிவேளி ஏரி
கலிவேளி ஏரி (Kaliveli Lake, அல்லது Kaliveli Lagoon) என்பது தமிழ்நாட்டின், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை சதுப்பு நில ஏரி மற்றும் கடற்காயல், நீர்த்தடம் ஆகும்.
கலிவேலி ஏரி Kaliveli Lake | |
---|---|
அமைவிடம் | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு |
ஆள்கூறுகள் | 12°07′11″N 79°51′28″E / 12.119728°N 79.857683°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
இந்த ஏரி வங்காள விரிகுடாவின் அருகில் [1]கோரமண்டல் கடற்கரையில் ஏறக்குறைய புதுச்சேரி நகரத்தில் இருந்து 16 கிலோமீட்டர்கள் (9.9 mi) வடக்கிலும், ஆரோவில்லில் இருந்து 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) வடக்கில் உள்ளது.
சூழலியல்
தொகுகலிவேளி ஏரி பருவகாலத்தில் நல்ல நீர் பாய்ந்து உவர் நீராகும் ஒரு நீர்த்தடம் ஆகும். மேலும் இது வலசை வரும் பறவைகளுக்கு உணவு தரும் இடமாகவும் குஞ்சுபொரிக்க வரும் இடமாகவும் உள்ளது. இந்த ஏரி இந்திய துணைக் கண்டத்தின் பெரிய நீர்த்தடங்களில் ஒன்றாகும். இந்த நீர்தடத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் முக்கியத்துவம் வாய்ததாக கருதுகிறது.
இது தற்போது வேளாண் நிலங்களாலுக்காக நிலத்தை ஆக்கிரமிப்பதாலும், வன வேட்டை, காடழிப்பு, அதிகரித்து வரும் இறால் பண்ணைகள் போன்றவற்றால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.
இது தென்னிந்திய கடலோர சுற்றுச்சூழல் தல உறைவிடங்களில் ஒன்று என்ற போதிலும், இந்த ஏரி அரிதாகத்தான் இயற்கை ஆர்வலர்களாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களாலும் ஆராயப்படுகிறது. இந்த ஏரியின் 90% கரைப் பகுதி சாலை வழியாக நெருங்க இயலாதவாறு உள்ளது. இதுவே இங்கு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பெருக முக்கிய காரணம் ஆகும். இந்த சதுப்பு நிலம் இங்கு வருபவர்களை மூழ்கடிக்கும் ஆபத்து வாய்ததாகவும், மிகவும் பயப்படத்தக்க யானைக்கால் நோய், மலேரியா போன்ற பிற நீர்வழி நோய்களை பரப்பும் பூச்சிகள் கொண்டதாக உள்ளது. எனவே இங்கு வருவர் தவறாமல் உடலை பூச்சிக் கடியிலிருந்து காக்கக்கூடிய உரிய பூச்சுக்களை பூசுவதும் தடித்த சப்பாத்துக்களை அணிவது அவசியம். இந்த ஏரி மிகவும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது மனித நடமாட்டம் 20 கி.மீ. வரை இல்லாத நிலை உள்ளதால் இங்கு வருபவர்கள் போதிய நீர், உணவு போன்ற அத்யாவசிய பொருட்களுடன் வருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
வரலாறு
தொகுஇந்த ஏரியின் வாய்காலின் துவக்கத்தில் காலனித்துவ ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த இடிபாடுக்கு ஆளான ஆலம்பரை கோட்டை உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கருவூலம்: விழுப்புரம் மாவட்டம்". https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2016/nov/26/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2604893.html. பார்த்த நாள்: 21 November 2021.