கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழ்நாடு அரசு திட்டமாகும். இத்திட்டம் தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவாக பெயரிடப்பட்டது. ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தபட்டது. இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 ஆம் நாள் தமிழக முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரையின் பிறந்த நாளில் மு. க. ஸ்டாலினால் துவக்கிவைக்கப்பட்டது.
பின்னணியும், செயல்படுத்தலும்
தொகு2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின்போது "ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்" எனும் 10 ஆண்டிற்கான தொலைநோக்கு வாக்குறுதியை அறிவித்தார். அதன்படி தி.மு.க தேர்தல் அறிக்கையில் "தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவோம்" என்ற வாக்குறுதியானது தி.மு.கழகத்தால் கொடுக்கபட்டது[1]. ஆனால் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்ற பின் இத்திட்டம் "தகுதியான மகளிருக்கு மட்டும் உரிமைத் தொகை" என 2023 தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன்படி திடத்திற்கான விண்ணப்பங்களை வழங்கும் முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் 2023 சூலை 24 முதல் ஆகத்து 14 வரை நடைபெற்றன.[2] திட்டத்தில் பயன்பெற தமிழ்நாடு முழுவதும் சுமார் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தகுதியானவர்கள் என முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர்.[3] திட்டத்தில் பயன்பெற தகுதி பெறாதவர்கள் மேல் முறையீடு செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
தகுதிகள்
தொகு- குடும்பத்தில் ஒருவர் மட்டுமே உரிமைத் தொகை பெறத் தகுதியானவராவார்.
- அரசு பணிபுரியும் அல்லது வருமானவரி செலுத்தும் பெண்கள் பயன் பெற முடியாது.
- வருமான வரி செலுத்தும் அல்லது ஜிஎஸ்டி வருமானத்தை தாக்கல் செய்பவர்களின் மனைவிகள் இத்திட்டத்தில் பலன் பெற முடியாது.
- அரசு ஓய்வூதியம் பெறுபவராகவோ, ஓய்வூதியம் பெறுபவரின் மனைவியாகவோ இருப்பவர்கள் பலன் பெற முடியாது.
- சொந்தமாக மகிழுந்து வைத்திருப்பவர்கள் பலன் பெற முடியாது.
பிற மாநிலங்களில் தாக்கம்
தொகு- தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கருநாடகத்தில் இ.தே.கா அரசின் முதல்வர் சித்தராமையாவால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கும் கிரகலட்சுமி என்ற திட்டத்தை 2023 ஆகத்து மாதம் துவக்கிவைத்தார்.[4]
- மகாராட்டிரத்தில் 2024 ஆகத்தில் லடுக்கி பகின் யோஜனா என்ற பெயரில் மகளிருக்கு மாதம் 1500 உதவித் தொகை வழங்கும் திட்டம் மாநில அரசால் துவக்கப்பட்டது.[5]
- சார்க்கண்டு மாநிலத்தில் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் ஹேமந்த் சோரன் தலைமையிலான மாநில அரசால் செயல்படுத்தப்பட்டது.[5]
- மத்தியப் பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டு மகளிருக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக மாநில அரசால் செயல்படுத்தப்பட்டது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2021/3/13/00-Corrected_-_DMK_Election_Manifesto_2021_Tamil_-_copy_from_Mugil.pdf
- ↑ https://tamil.oneindia.com/news/chennai/kalaignar-magalir-urimai-thogai-2nd-phase-rs-1000-to-be-credited-in-bank-account-from-today-555531.html?story=1 மகளிர் உரிமைத் தொகை.. வங்கிக்கணக்கில் இன்று முதல் ரூ. 1000 வரவு.. செக் பண்ணுங்க இல்லத்தரசிகளே, ஒன்இந்தியா, 9, நவம்பர் 2023
- ↑ "கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும் உளவியல் மாற்றங்களும் - ஒரு பார்வை #TNEmpowersWomen". 2023-09-15.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ தினத்தந்தி (2023-08-31). "கர்நாடகத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடக்கம்".
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help) - ↑ 5.0 5.1 5.2 சுப்ரமணியம், கணபதி (2024-11-24). "தேர்தல் வெற்றியே சாட்சி...? பிற மாநிலங்களுக்கும் பரவும் தமிழ்நாட்டின் மகளிர் நலத்திட்டங்கள்!". Puthiyathalaimurai. பார்க்கப்பட்ட நாள் 2024-11-25.