கல்பனா படோவரி

அசாமில் இருந்து வந்த இந்திய பின்னணி மற்றும் நாட்டுப்புற பாடகி

கல்பனா படோவரி (Kalpana Patowary) அசாமில் இருந்து வந்த இந்திய பின்னணி மற்றும் நாட்டுப்புற பாடகியாவார். 8000 க்கும் மேற்பட்ட பாடல்களை அசாமி, பிரஜாவாலி, பெங்காலி, போடோ, தியூரி, மைசிங், சமசுகிருதம், இந்தி, ஆங்கிலம், போஜ்புரி, மைதிலி, மாகி, ஆங்கிகா, ஒரியா, கரோ, கோச் ராஜ்போங்சி, திவா, கனாடா, தெலுங்கு, தோங்ரி, மராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, ஹரியான்வி, அர்பி, அவதி, குஜராத்தி, நேபாளி, சோனோவால் கோச்சாரி மற்றும் பங்களாதேஷ் போன்ற 30க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடுகிறார். [1] என்.டி.டி.வி இமேஜினில் ஜூனூன் - குச் கார் திகானே கா (2008) என்ற மெய்நிகர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் பல நாட்டுப்புற மற்றும் பிரபலமான பாடல்களைக் கொண்டிருந்தார் என்றாலும், போஜ்புரி இசையில் இவரது அர்ப்பணிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. [2]

கல்பனா படோவரி

அழிந்துபோன சில பாரம்பரிய நாட்டுப்புற வடிவங்களை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தியதன் மூலம் இவர் போஜ்புரி இசையை மீண்டும் அறிமுகப்படுத்தினார். போஜ்புரி இசையில் இவரது முழுமையான அர்ப்பணிப்பு இவருக்கு "போஜ்புரி ராணி" என்ற கௌரவத்தை வழங்கியது. [3]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

படோவரி அசாமில் உள்ள பார்பேட்டா மாவட்டத்தில் 1978 அக்டோபர் 27, அன்று பிறந்தார். [4] 1996 ஆம் ஆண்டில் அசாம் காட்டன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டமும், இலக்னோவில் இந்திய பாரம்பரிய இசையில் விசாரத் பட்டமும் பெற்ற படோவரி, தனது 4 வயதிலேயே வெளிப்படையான நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கினார். காம்ருபியா மற்றும் கோல்போரியா அசாமிய நாட்டுப்புற இசையில் பயிற்சியளிக்கப்பட்ட அவரது தந்தை சிறீ பிபின் படோவாரி, ஒரு நாட்டுப்புற பாடகராவார். படோவரி லக்னோவின் பட்கண்டே இசைப் பல்கலைக்கழகத்தில் இந்திய பாரம்பரிய சங்கீத விசாரத் ஆகவும் பயிற்சி பெற்றவராவார். [5] பூர்வி, பக்ரா, கஜ்ரி, சோகர், விவா கீத், சைட்டா, மற்றும் நௌதாங்கி உள்ளிட்ட பல வகையான போஜ்புரி நாட்டுப்புற இசையை இவர் பாடுகிறார். [6]

படோவரி பிகாரி தாக்கூரின் படைப்புகளில் விரிவாக பணியாற்றியுள்ளா.மேலும், அவரது வாழ்க்கை மற்றும் பணியை நினைவுகூரும் ஒரு தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

தொழில்

தொகு

காதி பிர்கா பாரம்பரியத்தின் ஒரு பழமையான பாரம்பரியத்தை சர்வதேச தளங்களுக்கு வழங்கிய முதல் போஜ்புரி பாடகர் படோவரி ஆவார். [7] 2013 ஆம் ஆண்டில், படோவரி "பைடீசியா இன் மும்பை" என்ற ஆவணப்படத்தில் தோன்றினார். இது 2013 டிசம்பர் 8 அன்று வெளியிடப்பட்டது. இது புலம்பெயர்ந்த தொழிலாளியின் பார்வையாகவும் மற்றும் அவரது இசை மூலம் மும்பையைப் பார்க்கிறது.  

இந்திய வருகை தினத்தை முன்னிட்டு கலாச்சார விவகார அமைச்சகம் வழங்கிய நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 நாள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க இவர் அழைக்கப்பட்டார்.  

சாப்ராகியா பூர்வி பாணியில் பதிவுசெய்து பாடிய முதல் பெண் படோவரி ஆவார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

2018 சூலையில் படோவரி பாரதிய ஜனதா கட்சியில் அதன் தலைவர் அமித் ஷா மற்றும் பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி முன்னிலையில் பாட்னாவில் இணைந்தார். [8]

குறிப்புகள்

தொகு
  1. https://ethnocloud.com/Kalpana_Patowary300515/?pg=about
  2. "Assamese singer Kalpana Patowary resurrects Bhojpuri Shakespeare". easternfare.in. Eastern Fare Music Foundation. பார்க்கப்பட்ட நாள் 27 July 2015.
  3. https://ethnocloud.com/Kalpana_Patowary300515/?pg=about
  4. "Meet Kalpana Patowary, the Assamese 'Bhojpuri Melody Queen' from Guwahati!". The North East Today. 2016-10-28 இம் மூலத்தில் இருந்து 2016-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161021025746/http://thenortheasttoday.com/meet-kalpana-patowary-the-assamese-bhojpuri-melody-queen-from-guwahati/. 
  5. "Kalpana Patowary OkListen!". OkListen. https://www.oklisten.com/KalpanaPatowary. 
  6. "Folk traditions to come alive". 21 July 2015. https://www.deccanherald.com/content/490394/folk-traditions-come-alive.html. 
  7. "Meet Kalpana Patowary, the Assamese 'Bhojpuri Melody Queen' from Guwahati!". The North East Today. 2016-10-28 இம் மூலத்தில் இருந்து 2016-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161021025746/http://thenortheasttoday.com/meet-kalpana-patowary-the-assamese-bhojpuri-melody-queen-from-guwahati/. 
  8. "Bhojpuri singer Kalpana Patowary joins BJP". Times Of India. 2018-07-13. https://m.timesofindia.com/city/guwahati/bhojpuri-singer-kalpana-patowary-joins-bjp/articleshow/64972361.cms. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kalpana Patowary
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_படோவரி&oldid=3777501" இலிருந்து மீள்விக்கப்பட்டது