கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன்

கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன் (Kalyani Pramod Balakrishnan) தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த ஒரு இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இவர் கிராம அபிவிருத்தி அமைச்சாகத்தின் மூலம் நெசவாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் 2016இல் நாரி சக்தி விருதினைப் பெற்றார்.

கல்யாணி பிரமோத் பாலகிருஷ்ணன்
Woman holding framed certificate
நாரி சக்தி விருது பெறும் கல்யாணி
தேசியம் இந்தியா
பணிஆடை வடிவமைப்பாளர்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வளர்ந்தார். [1] இவர் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பைப் படித்தார். பின்னர் ஒரு ஆடைகள் விற்பனையகத்தைத் திறந்தார். [2] 1995ஆம் ஆண்டில், இவர் 'அன்றாட வாழ்க்கையில் வாழுதல்' என்று அழைக்கப்படும் ஒரு குவளையை செய்தார். பின்னர் இது அயர்லாந்தில் ஒரு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. [3]

தொழில் தொகு

பாலகிருஷ்ணன் ஆறு ஆண்டுகளில் தமிழகத்தின் பதின்மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 19,500 நெசவாளர்களுடன் கிராம அபிவிருத்தி அமைச்சகத்தில் பணியாற்றினார். பின்னர் இவர் மதியிறுக்கம் அல்லது பெருமூளை வாதம் உள்ளவர்களுக்கு நெசவு கற்றுக்கொள்ள உதவத் தொடங்கினார். [4] இவரது பணிக்கு அங்கீகாரம் அளித்து, 2016 ஆம் ஆண்டு நாரி சக்தி விருதினை இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியிடமிருந்து பெற்றார். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "Textile details". CAIN. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
  2. "Nari Shakti Puraskar 2016". UPSCSuccess. 10 March 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
  3. "Event details". CAIN. பார்க்கப்பட்ட நாள் 14 January 2021.
  4. "‘Nari Shakti’ awards for four from state". Gulf Times: p. 24. 13 March 2017 இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210128105050/https://www.gulf-times.com/content/pdf/Dailynewspaper/Main2017_3_13486975.PDF. 
  5. "Four from State receive Nari Shakti awards". The Hindu. 9 March 2017. https://www.thehindu.com/news/cities/chennai/four-from-state-receive-nari-shakti-awards/article17430682.ece.