கல்யாண் பானர்ஜி

கல்யாண் பானர்ஜி (Kalyan Banerjee) என்பவர் புது தில்லியைச் சேர்ந்த இந்திய ஓமியோபதி மருத்துவர் ஆவார். மிஹிஜான் ஓமியோபதி நிறுவனத்தின் முன்னாள் மாணவரான இவர் 1977-ல் புது தில்லியின் சித்தரஞ்சன் பூங்காவில் உள்ள ஓமியோபதி சுகாதார மையமான மருத்துவர் கல்யாண் பானர்ஜி மருத்துவ மையத்தினை நிறுவினார். இவர் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் உள்ள ஓமியோபதி ஆராய்ச்சிக்கான மத்தியக் குழு போன்ற பல அரசு நிறுவனங்களுடன் தொடர்புடையவர். இக்குழுவின் உறுப்பினராகவும், அமைச்சகத்தின் ஓமியோபதி ஆராய்ச்சிக்கான மத்தியக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். ஆயுஷ், ஓமியோபதி மருந்தியல் குழு மற்றும் நிலையான நிதிக் குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டில், மருத்துவத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இந்திய அரசு இவருக்கு நான்காவது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கியது.[1]

கல்யாண் பானர்ஜி
Kalyan Banerjee
பிறப்புபுது தில்லி, இந்தியா
பணிஓமியோபதி மருத்துவர்
அறியப்படுவதுஓமியோபதி
பிள்ளைகள்மருத்துவர் கவுசால் பானர்ஜி
விருதுகள்பத்மசிறீ
வலைத்தளம்
www.drkbanerjee.com

மேற்கோள்கள் தொகு

  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்யாண்_பானர்ஜி&oldid=3789372" இலிருந்து மீள்விக்கப்பட்டது