கல்லடி (மட்டக்களப்பு)

கல்லடி (Kallady) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பின் நகரிலிருந்து கல்முனை-மட்டக்களப்பு பிரதான வீதியில் சுமார் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இலங்கையின் மிகவும் நீளமான ஒல்லாந்தர் காலத்துப் புகழ் பெற்ற பாலம் இங்கு காணப்படுகின்றது. 2004 ஆழிப்பேரலையின் போது இப்பாலம் வெகுவாக பாதிக்கப்பட்டதால் தற்போது புதிதாக ஒரு பாலம் சுனாமி நிவாரண நிதியின் மூலம் புனரமைக்கப்படுகின்றது[1][2]. சுவாமி விபுலாநந்தரின் சமாதியும் இங்கு உள்ளது.

கல்லடி
கிராமம்
கல்லடி கடற்கரை
கல்லடி கடற்கரை
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிசெ பிரிவுமண்முனை வடக்கு

கல்லடியின் கிழக்கே இந்தியப் பெருங்கடலின் ஓரமாக இலங்கையின் பிரசித்தி பெற்ற ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் காணப்படுகின்றது. புகழ்பெற்ற சிவானந்தா வித்தியாலயம், இராமகிருட்டிண மிசன் ஆகியவை இப்பிரதேசத்தின் பெருமைக்குரிய சொத்துக்கள் ஆகும். அத்துடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி பிரதான அலுவலகம், இலங்கை மின்சார சபை பிரதான காரியாலயம், கட்டிடங்கள் திணைக்களம் போன்ற அரச திணைக்களங்கள் இங்கு காணப்படுகின்றன.

கல்லடியின் கடற்கரை மட்டக்களப்பு மக்களின் பொழுதுபோக்கு இடங்களில் முதன்மை பெறுகின்றது.

கல்லடி காட்சியகம்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 7°42′42″N 81°42′32″E / 7.71167°N 81.70889°E / 7.71167; 81.70889

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லடி_(மட்டக்களப்பு)&oldid=2770484" இருந்து மீள்விக்கப்பட்டது