கல்லணை கால்வாய்
கல்லணை கால்வாய் (Grand Anicut Canal System) அல்லது புது ஆறு என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கால்வாய் ஆகும். இது காவேரி-மேட்டூர் திட்டத்தின் ஒரு பகுதியாக 1925-1934 கட்டப்பட்டது. மேட்டூர் அணை கட்டிடக்கலைஞரான இங்கிலாந்து பொறியாளர் படையணி கட்டளையாளர் டபிள்யூ. எம். எல்லிசு, திருவிதாங்கூர் திவான் சி. பி. ராமசாமி அய்யரின் வேண்டுகோளின் பேரில் இந்தக் கால்வாயை வடிவமைத்தார்.[1]
இந்த கால்வாய், கல்லணை அணையின் வலது பக்கத்தில் தொடங்கி தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது. தஞ்சாவூரில், தஞ்சைப் பெருவுடையார் கோவில் அருகே கால்வாய் செல்கிறது. பிரதானக் கால்வாயின் நீளம் 148 கி. மீ. ஆகும். மொத்தம் 1,232 கி. மீ நீளமுள்ள 327 கிளை கால்வாய்கள் இதனுடன் உள்ளன. இந்தக் கால்வாய் 2.50 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் செய்கிறது.[2]
அதிகபட்சமாக இக்கால்வாயில் 4,400 கன அடி வரை தண்ணீரை எடுத்துச் செல்ல முடியும்.[3] கால்வாயின் நீர் எடுத்துச் செல்லும் திறனை மேம்படுத்துவதற்காக 2,640 கோடி செலவில் ஒரு பெரிய மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கால்வாய் முழுவதும் பைஞ்சுதை கொண்டு தரையை அமைப்பதால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது பாதிக்கும் என்பதால் இத்திட்டத்திற்கு எதிராக பொது நல வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kallanai canal The tale of Thanjavurs River Thames". ETV Bharat News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-28.
- ↑ "Rehabilitation of Grand Anicut canal hangs in balance" (in en-IN). The Hindu. 2013-12-14. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/tamil-nadu/rehabilitation-of-grand-anicut-canal-hangs-in-balance/article5458989.ece.
- ↑ இளங்கோவன்,தே.தீட்ஷித், நவீன். "கல்லணைக் கால்வாயில் கான்கிரீட் தளம்; விவசாயிகளுக்கு கை கொடுக்குமா?". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2023-01-28.
- ↑ "Tamil Nadu: Plea against laying concrete lining in Grand Anicut canal | Madurai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Jun 14, 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-01-28.
- ↑ "PM Modi to inaugurate multiple development projects in TN, Kerala from Sunday". The News Minute (in ஆங்கிலம்). 2021-02-12. பார்க்கப்பட்ட நாள் 2023-02-03.