கல்லாத்துகோம்பை ஆல்முனி பெரியண்ணசாமி கோயில்

கல்லாத்துகோம்பை ஆல்முனி பெரியண்ணசாமி கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள பா. மேட்டுர் பகுதியைச் சார்ந்த கல்லாத்துகோம்பையில் உள்ள சிறுதெய்வக் கோயிலாகும். இக்கோயில் கொல்லிமலையிலுள்ள மாசி பெரியசாமியின் அடிவாரக் கோயிலாகும். இக்கோயிலை ஆமு பெரியசாமி கோயில் என்றும் அழைக்கின்றார்கள். கொல்லைமலை பெரியசாமிக்கு கட்டப்பட்டுள்ள கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலை சோழிய வெள்ளாளர் இனத்தினைச் சேர்ந்தவர்கள் கட்டி பராமரித்து வருகின்றனர்.

சோழியவெள்ளாளர்கள் கட்டிய பழ மையான பெரியண்ணன் கோயில்

இக்கோயிலுக்கு அருகிலேயே முத்தரையர் இனத்தினைச் சேர்ந்தவர்களின் மாசி பெரியசாமி அன்னகாமாட்சி கோயிலும் உள்ளது.

பெயர்க்காரணம் தொகு

இக்கோயின் மூலவர் மாசி பெரியசாமியாவார். இவரை ஆல்முனி என்று அழைக்கின்றனர். பல காலங்களுக்கு முன்பு இந்த இடத்தில் 108 ஆலமரங்கள் இருந்ததாகவும். அதில் முனிகள் மற்றும் கருப்பு சாமிகளில் மூத்தவராக கருதப்படும் பெரிசாமி இருந்தமையால் ஆல்முனி என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். அந்த பழைய மரங்களை அழிந்து தற்போது வயல்வெளிகளும், வீடுகள் அமைந்துள்ளன. கோயிலைச் சுற்றி மட்டும் ஐந்தாறு மரங்கள் உள்ளன.

கோயில் அமைப்பு தொகு

ஆலமரங்களின் நிழலில் ஆல்முனி பெரியண்ணசாமிக்கு ஒற்றை கருவறைக் கொண்ட செங்கல், சிமெண்டால் ஆன கோயில் உள்ளது. கருவறையின் முன்புறம் முன்மண்டபமும் உள்ளது. இந்தக் கோயிலுக்கு எதிரே வெண்குதிரை வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. அக்குதிரை வாகனத்திற்கு சிமெண்ட் கூறை போடப்பட்டுள்ளது. மூலவர் மற்றும் வெண்குதிரைக்கு நடுவில் வேல்கள் நடப்பட்டு அதனருகே பலிகள் இடப்படுகின்றன. பக்தர்கள் வேல்களுக்கு முன்பு உருவாரங்களைப் படைக்கின்றார்கள்.

மூலவர் தொகு

ஆல்முனி பெரியண்ணசாமி கோயிலில் மூலவர் சிலை எட்டடி உயரம் கொண்டது. பெரியண்ணசாமி வலதுகையில் வைத்துள்ள வேலால் வேங்கையைக் கொண்டு, அதனை வலதுகாலால் மிதிப்பது போல மூலவர் சிலை அமைந்துள்ளது. இடது கையிலுள்ள கதையை தரையில் படும்படும் வைத்துள்ளார். மூலவரின் வலதுபக்கத்தில் ஒரு இரண்டடி சுயம்பு கல் உள்ளது.

இங்கு பெரியண்ண சாமிக்கு திருநீற்று பட்டை இடப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக திருநீறு தரப்படுகிறது. அருகிலேயே பிரசாதங்களை விற்பனை செய்தல், திருமுடி காணிக்கை செய்தல் போன்ற இடங்கள் உள்ளன.

பிற சன்னதிகள் தொகு

இக்கோயிலுக்கு அருகிலேயே பா. மேட்டூர் மாசி பெரியண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. இது முத்தரையர் இனத்தவரால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்ற கோயிலாகும். இக்கோயிலுக்கு அருகிலேயே ஒரு பிள்ளையார் கோயிலும், புத்துமாரியம்மன் கோயிலும், முத்தரையர் கட்டிய கோயிலில் வேங்கைமீது பெரியண்ணசாமி அமர்ந்துள்ளதுபோல சிலையுள்ளது. இங்கு பெரியண்ணசாமிக்கு திருமண் இடப்பட்டுள்ளது. ஆலமரத்தடியில் வடபத்ரகாளியம்மன் சன்னதியும் அமைந்துள்ளன.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு