கல்லுக்கு இரையாகும் சோராயா எம். (திரைப்படம்)

கல்லுக்கு இரையாகும் சோராயா எம். (The Stoning of Soraya M.) என்ற திரைப்படத்தை 1990ம் ஆண்டு பிரான்ஸ் ஈரானியன் எழுத்தாளர் பிரிடொனெ சகெப்ஜெம் (Freidoune Sahebjam) என்பவரால் எழுதி விளிவந்த (La Femme Lapidée)(பாரசீக மொழி: .سنگسار ثريا م‎) பாரசீக புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து, 2008ம் ஆண்டு அமெரிக்க தயாரிப்பாளரான க்ரொவ்ஸ் நவ்ரஸ்ட் (Cyrus Nowrasteh) என்பவரால் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தில் ஈரானியன் அமெரிக்கன் நடிகை சொஹ்ரெ அக்டஷ்லோ (Shohreh Aghdashloo),அமெரிக்க திரைப்பட நடிகர் ஜிம் கவிஎசில் (Jim Caviezel) ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படம் அகாடமி விருது பெற்றுள்ளது.[3]

The Stoning of Soraya M.
(.سنگسار ثريا م)
இயக்கம்Cyrus Nowrasteh
தயாரிப்புStephen McEveety
John Shepherd
Todd Burns
Diane Hendricks[1]
மூலக்கதைLa Femme Lapidée
படைத்தவர் பிரிடொனெ சகெப்ஜெம்(Freidoune Sahebjam)
திரைக்கதைBetsy Giffen Nowrasteh
க்ரொவ்ஸ் நவ்ரஸ்ட்Cyrus Nowrasteh
இசைJohn Debney
நடிப்புMozhan Marnò
சொஹ்ரெ அக்டஷ்லோ
ஜிம் கவிஎசில்(Jim Caviezel)
Parviz Sayyad
Vida Ghahremani
Navid Negahban
ஒளிப்பதிவுசொய்ல் ரான்சன் (Joel Ransom)
படத்தொகுப்புடேவிட் கேன்ட்மன் (David Handman)
ஜியோப்ரி ரோவ்லன்ட் (Geoffrey Rowland)
கலையகம்எம்பவர் பிக்சர்
விநியோகம்ரோட் சைடு அட்ராக்சன்
வெளியீடுசெப்டம்பர் 7, 2008 (2008-09-07)(TIFF)
சூன் 26, 2009 (அமெரிக்கா)
அக்டோபர் 22, 2010 (இங்கிலாந்து)
ஓட்டம்116 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிபாரசீகம்
ஆங்கிலம்
மொத்த வருவாய்$1,090,260[2]
மனிதர்களை கல்லால் அடிக்கும் காட்சி

உண்மைக்கதை

தொகு

1986ம் ஆண்டு ஈரான் நாட்டின் வெகு தொலைவில் உள்ள கிராமத்திற்கு ஒரு எழுத்தாளர் செல்ல வேண்டியது உள்ளது. அவர் தனது நான்கு சக்கர வாகனத்தில் செல்லுகிறார். அப்போது வாகனம் பழுதாகி நின்றுவிடுகிறது. அதனை அவர் பழுது நீக்க விளைகிறார். அப்போது அவ்வழியே ஒரு இளம் பெண் நடந்து வருகிறார். எழுத்தாளருக்கு அப்பெண்ணின் அறிமுகம் கிட்டுகிறது. அப்போது அப்பென் ஒரு உண்மைச்சம்பவத்தை கூறுகிறார். அது உலகத்தையே அதிர்ச்சிக்கு உட்படுத்தும் சம்பவம் ஆகும்.

ஈரான் நாட்டின் கிராமத்தில் 'சோராயா என்ற பெண் தனது குழந்தைகளுடம் வாழுகிறாள். 14 வயது [4] பெண்ணை மணமுடிக்க வக்கிர கணவன் அலி ஆசைப்பட்டதால் கொடுமைப்படுத்தப்பட்டு அவளை 'தலாக்' செய்ய ஆசைப்பட்டு ஊர் தலைவர் முல்லாவிடம் முறையிடுகிறான். ஆனால் ஊர் தலைவர் சோராயா மேல் ஆசைப்படுகிறான். அதற்கு சம்மதிக்க மறுக்கிறாள் சோராயா. பின்னர் தன் குழந்தைகளுக்காக ஒரு வீட்டில் வேலைக்கு செல்கிறாள். இதை சாதகமாக்கப் பார்க்கிறான் ஊர் தலைவன், இவள் நடத்தை கெட்டவள், அவள் வேலை செய்யும் எஜமானரிடம் தவறாக நடந்தாள் என்று கூறி, அவளை கல்லால் அடித்து கொல்ல உத்தரவிடுகிறான். ஊர் பொது இடத்தில் அவளை பாதி உடம்பு மூழ்கும்படி மண்ணில் புதைத்து, அருகில் கற்களைக் குவித்து அவளின் குழந்தை, அவளின் பெற்றோர் உட்பட ஊர்பொதுமக்கள் அனைவரும் கல்லால் அடிக்கிறார்கள். இந்நிகழ்வு திரைப்படத்திலேயே பார்ப்பவர்களை கண்ணீர் வடிக்கச்செய்கிறது.[5]

பரிசுகள்

தொகு

கனடா நாட்டில் டொராண்டோ நகரில் 2008ம் ஆண்டு நடந்த டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா (Toronto International Film Festival) பார்வையாளர்கள் விருப்ப விருதினைப் பெற்றது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Diane Hendricks". IMDb.
  2. "The Stoning of Soraya M. (2009)". Box Office Mojo. நவம்பர் 24, 2009. பார்க்கப்பட்ட நாள் மே 9, 2010.
  3. "The horrific execution scene that got a film banned... and why the director hopes it will stop death row woman being stoned". Daily Mail. அக்டோபர் 18, 2010. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 10, 2013.
  4. "The Stoning of Soraya M. Review". Screen Rant. c. 2009. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 10, 2010.
  5. http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2173&Cat=501தினகரன்[தொடர்பிழந்த இணைப்பு] பார்த்த நாள் 28.01.2014