கல்வகுண்ட்லா சஞ்சய்
கல்வகுண்ட்லா சஞ்சய் (Kalvakuntla Sanjay) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1976 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இயக்டியல் மாவட்டத்தில் உள்ள கொருட்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இவர் உள்ளார். பாரத் இராசுட்டிர சமிதி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[1][2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுதெலுங்கானாவின் இயக்தியல் மாவட்டத்தின் மல்லாபூர் மண்டலத்தில் உள்ள இராகவாபேட்டை கிராமத்தில் கல்வகுண்ட்லா வித்யாசாகர் மற்றும் சரோச்சா ஆகியோருக்கு மகனாக சஞ்சய் பிறந்தார். இவரது தந்தை மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை குண்டூரில் உள்ள விக்னான் கல்லூரியில் சஞ்சய் இடைநிலைப் பட்டம் பெற்றார். பின்னர், நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்று, 1999 ஆம் ஆண்டில் பீச்சப்பூர் பி. எம். படேல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டில் எலும்பியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற இவர், மைசூரில் உள்ள இயே. எசு. எசு கல்லூரியில் முதுகலை அறுவை சிகிச்சையை முடித்தார். பின்னர், இவர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைகளில் பணியாற்றத் தொடங்கினார்.[3]
அரசியல் வாழ்க்கை
தொகுசஞ்சய் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரத் இராசுட்டிர சமிதி கட்சி சார்பாக கொருட்லா சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். 72,115 வாக்குகளைப் பெற்று தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய சனதா கட்சி வேட்பாளரான தர்மபுரி அரவிந்தை 10,305 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Telangana Elections: తొలి అడుగులోనే సంచలన గెలుపు |". web.archive.org. 2023-12-04. Archived from the original on 2023-12-04. பார்க்கப்பட்ட நாள் 2024-07-17.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "Kalvakuntla Sanjay, BRS Candidate from Koratla Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-17.
- ↑ "Kalvakuntla Sanjay(BRS):Constituency- KORATLA(JAGTIAL) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-07-17.
- ↑ "Koratla constituency election result 2023: Kalvakuntla Sanjay from BRS wins". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/koratla-constituency-election-result-2023-its-brs-candidate-kalvakuntla-sanjay-against-narsinga-rao-juvvadi-from-inc/articleshow/105695123.cms.
- ↑ "Koratla assembly election results 2023: Koratla Winning Candidates List and Vote Share". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-17.
- ↑ english. "Koratla Election Result 2023 Live, Koratla Elections Vote Counting, Telangana Results 2023 | ABPLive". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-17.