கல்வட்டம் என்பது வில்ட்ஷையர், இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும். இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இவ்வமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள். இத்தொல்பொருட் சின்னத்தின், மிகப் பழைய பகுதியாகக் கருதப்படும், பழைய வட்டவடிவ மண் மேடுகளும், குழிகளும் கி.மு 3100 ஐச் சேர்ந்தவையெனக் கூறப்படுகின்றது. இது அமைந்துள்ள இடமும், சுற்றாடலும், 1986ல் யுனெஸ்கோ வினால், உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இது பண்டையகால தேசிய நினைவு சின்னமாதலால், சட்டபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. தேசிய அறக்கட்டளைக்கு சொந்தமான ஸ்டோன்ஹெஞ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள், இங்க்லீஷ் ஹெரிடேஜ் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மைக் பார்க்கர் பியர்சன், ஸ்டோன்ஹெஞ்ச் ரிவர்சைட் ப்ராஜெக்டின் தலைவர், ஸ்டோன்ஹெஞ்ச் என்பது பண்டைய கால கல்லறையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்கிறார். இக்கட்டுமானங்கள் குறைந்தது 1500 வருடங்களாவது நீடித்திருக்கிறது. கால அளவீடும், புரிந்துகொள்ளுதலும்; ஆரம்பகால தரமில்லாத அகழ்வாராய்ச்சி, விலங்குகளின் துளைத்தல் மற்றும் சரியில்லாத அறிவியல் பூர்வ கால் அளவீடு முதலிய காரணங்களால் மிகவும் கடினமாகிறது.

கல்வட்டம்
Stonehenge in 2014
கல்வட்டம் is located in Wiltshire
கல்வட்டம்
Map of Wiltshire showing the location of Stonehenge
இருப்பிடம்Wiltshire, இங்கிலாந்து
ஆயத்தொலைகள்51°10′43.84″N 1°49′34.28″W / 51.1788444°N 1.8261889°W / 51.1788444; -1.8261889
அதிகாரபூர்வ பெயர்: Stonehenge, Avebury and Associated Sites
வகைCultural
அளவுகோல்i, ii, iii
வரையறுப்பு1986 (10th session)
சுட்டெண்373
RegionEurope and North America

2008 ஆம் ஆண்டின் ஸ்டோன்ஹெஞ் ரிவர்சைடு திட்டம் மூலம் கிடைத்த தொல்லியல் சான்றுகள் ஸ்டோன்ஹெஞ் அதன் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு கல்லரையாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது.[1] தளத்தில் காணப்படும் மனித எலும்புகள் கி.மு. 3000 ஆம் ஆண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிகிறது. இத்தகைய உடல் தகனங்கள் குறைந்தது அடுத்த 500 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.[2] இந்த தளம் யாத்திரை மேற்கொள்ளும் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்துள்ளது. [சான்று தேவை]

ஆரம்பகால வரலாறு

தொகு
 
ஸ்டோன்ஹெஞ் பகுதியில் கதிர்த்திருப்பதில் சூரிய உதயம்

ஸ்டோன்ஹெஞ் பல கட்டங்களாக உருவானது. அதன் கட்டுமானம் குறைந்தது 1,500 ஆண்டுகள் நீடித்திருந்தது. அதை சுற்றி பெரிய அளவிலான கட்டுமானம் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. இது ஒருவேளை 6,500 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம். விலங்குகளின் செய்கையால் சுண்ணாம்புக்கல் சிதைவுற்றிருப்பது, தரமற்ற ஆரம்ப அகழ்வாராய்ச்சி பதிவுகள், மற்றும் துல்லியமான, அறிவியல் பூர்வமான தேதிகள் இல்லாததால் பல்வேறு காலகட்டங்களில் கட்டுமானம் குறித்து புரிந்து கொள்வது சிக்கலாக உள்ளது.

செயல்பாடு மற்றும் கட்டுமானம்

தொகு

ஸ்டோன்ஹெஞ் எழுதப்பட்ட பதிவுகளை விட்டு செல்லும் ஒரு கலாச்சாரத்தால் கட்டப்படவில்லை. ஸ்டோன்ஹெஞ்சின் பல அம்சங்கள் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றன.[3] ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான நுட்பங்கள் குறித்து எந்த நேரடி சான்றும் இல்லை. பல ஆண்டுகளாக, பல ஆசிரியர்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (இல்லையெனில் அந்த கற்களை நகர்த்துவது சாத்தியமற்றது) என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இத்தளம் வானியல் ஆய்வுக்கோ, சமய தளமாகவோ பயன்படுத்தப்பட்டிருக்களாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

சமீபத்தில் இரண்டு முக்கிய புதிய கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. பேராசிரியர் ஜெஃப்ரி வைன்ரைட் மற்றும் புர்னெமவுத் பல்கலைக்கழகம் சேர்ந்த பேராசிரியர் டிமோதி, ஸ்டோன்ஹெஞ் லூர்து சமமான ஒரு சிகிச்சையளிக்கும் இடமாக இருந்தது என்று கருதுகின்றனர். இந்த பகுதியில் உள்ள கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை வைத்து அவர்கள் வாதிடுகின்றனர். எனினும் மூதாதையர் வழிபாட்டிற்கு இத்தளம் பயன்படுத்தப்பட்டிறுக்கிறது என்பதையும் அவர்கள் ஒப்புகொள்கின்றனர்.[4] ஐசோடோப்பு பகுப்பாய்வு புதைக்கப்பட்ட நபர்களில் சிலர் மற்ற பகுதிகளில் இருந்தவர்கள் என்று தெரிகிறது. ஸ்டோஹெஞ் ஒரு இறுதி ஊர்வல நினைவுச்சின்னமாக கட்டப்பட்டது என்ற யோசனையை முன்வைப்போரும் உண்டு. அதன் வடிவமைப்பு கிரகணம் உள்ளிட்ட பிற வான நிகழ்வுகளை கணிப்பதை முக்கியமான குறிக்கோளாக கொண்டுள்ளது.[5]

2012 ல் முன்மொழியப்பட்ட மற்றொரு கோட்பாடு, ஸ்டோன்ஹெஞ் பிரித்தானிய தீவின் பல்வேறு மக்களை ஐக்கியப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது என்று அறிவுறுத்துகிறது. இந்த கோட்பாட்டின் படி ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இடையேயான பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் தேவை [3] குறிப்பாக கற்கள் வேல்ஸ் போன்ற பகுதியில் இருந்த குவாரிகளில் இருந்து, மிக நீண்ட தூரம் எடுத்து செல்லப்பட்டது.[6]

நவீன வரலாறு

தொகு
 
ஹீல் ஸ்டோன்

"ஹீல் ஸ்டோன்" அல்லது "சன் ஸ்டோன்"

தொகு

ஹீல் ஸ்டோன் தற்போதைய A344 சாலையை அடுத்து , ஸ்டோஹெஞ்சின் முக்கிய நுழைவாயிலுக்கு வெளியே உள்ளது. 16 அடி (4.9 மீ) உயரமான அந்த கரடுமுரடான கல் கல் வட்டம் நோக்கி உட்புறமாக சாய்ந்து இருக்கிறது. இது "ஹீல் ஸ்டோன்" மற்றும் "சன் ஸ்டோன்" உட்பட, கடந்த காலத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுது. கோடைகால உச்சத்தில் கல் வட்டத்தின் உள்ளே நின்று வாசல் வழியாக வட கிழக்காக பார்த்தால் ஹீல் ஸ்டோன் மீது சூரிய உதயத்தை காணலாம்.

16 ஆம் நூற்றாண்டு முதல்

தொகு

இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அமெஸ்பரி அபே மற்றும் அதன் சுற்றியுள்ள நிலங்களை கைப்பற்றியது முதல் ஸ்டோன்ஹெஞ்சின் உரிமை பல முறை மாறிவிட்டது. 1540 ம் ஆண்டில் ஹென்றி, ஹெர்ட்ஃபோர்டை சேர்ந்த கோமானுக்கு கொடுத்தார். இது பின்னர் லார்ட் கார்லேடன் பின்னர் மார்க்வெஸ் குயின்ஸ்பரியிடம் சென்றது. சேஷையரை சேர்ந்த அன்ட்ரோபஸ் குடும்பம் 1824 ஆம் ஆண்டு அதை வாங்கியது. முதல் உலக போரின் போது ஒரு விமான நிலையம் இந்த வட்டத்தின் மேற்கு பகுதியில் கட்டப்பட்டது. உலர் பள்ளத்தாக்கில் ஒரு முக்கிய சாலை சந்திப்பும், ஓட்டலும் கட்டப்பட்டது. அவர்களின் கடைசி வாரிசு பிரான்ஸ் மோதல்களில் கொல்லப்பட்ட பின் அன்ட்ரோபஸ் குடும்பம் அந்த இடத்தை விற்றது. பின்னர் சாலிஸ்ப்யூரியை சேர்ந்த நைட் பிராங்க் & ருட்லெய் முகவர் மூலம் 21 செப்டம்பர் 1915 அன்று ஏலம் விடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Pitts, Mike (8 ஆகஸ்ட் 2008). "Stonehenge: one of our largest excavations draws to a close". British Archaeology (York, England: Council for British Archaeology) (102): p13. பன்னாட்டுத் தர தொடர் எண்:1357-4442. 
  2. Schmid, Randolph E. (29 மே 2008). "Study: Stonehenge was a burial site for centuries". Associated Press இம் மூலத்தில் இருந்து 2008-06-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080601081424/http://ap.google.com/article/ALeqM5iqofgTOoY9jVxd8Vir3t2lq-yfowD90VGRV80. பார்த்த நாள்: 26 திசம்பர் 2013. 
  3. 3.0 3.1 "Stonehenge a monument to unity, new theory claims – CBS News". Archived from the original on 2013-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-12-26.
  4. Maev Kennedy (23 செப்டம்பர் 2008). "The magic of Stonehenge: new dig finds clues to power of bluestones". Guardian (UK). http://www.guardian.co.uk/science/2008/sep/23/archaeology.heritage. பார்த்த நாள்: 26 திசம்பர் 2013. 
  5. Hawkins, GS (1966). Stonehenge Decoded. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-88029-147-7.
  6. Williams, Thomas; Koriech, Hana (2012). "Interview with Mike Parker Pearson". Papers from the Institute of Archaeology 22: 39–47. doi:10.5334/pia.401. http://dx.doi.org/10.5334/pia.401. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வட்டம்&oldid=3924805" இலிருந்து மீள்விக்கப்பட்டது