கல்வி மேலாண்மை

கல்வி மேலாண்மை என்பது மனித வளத்தின் மூலமும் பொருட்களின் மூலமும் நிறுவனத்தின் இலக்குகளை தீர்மானித்து திட்டமிட்டு கட்டுப்படுத்தி இயக்குவதும் மதிப்பீடு செய்வதும் ஆகும்..[1][2] கல்வி மேலாண்மையில் மாந்தரின் சிந்தனை, ஆற்றல், பயன்பாடு, கால எல்லை ஆகிய கூறுகள் உள்ளன.

கல்வி மேலாண்மையின் கருத்துப்படிமங்கள் சார்ந்த மன உருவகம்
கல்வி மேலாண்மை பருந்துப் பார்வை

கல்வி என்பதுஅறிவு, திறன்கள், விழுமியங்கள், தன்னம்பிக்கை, பழக்க வழக்கங்கள், மனப்பான்மைகள் ஆகியவற்றைக் கற்றல் பட்டறிவோடு வளர்க்கும் சமூகநிகழ்வாகும். கல்வி அமைப்பு, தொழில்முறைக் கல்வியாளர்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அமைச்சகம், கல்விப் பணியாளர் ஒன்றியங்கள், சட்ட வாரியங்கள், கல்வி முகமைகல், பள்ளிகள், கல்லுரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியன அடங்கிய சூழல் அமைப்பாகும். கல்விக்குழுவில் அரசியல் தலைவர்கள், கல்வி நிறுவன முதல்வர்கள், கல்வி கற்பிக்கும் பணியாளர்கள், கல்விசாரா பணியாளர்கள், கல்வி ஆட்சியாளர்களளாகியோர் ஒருங்கிணைந்துப் பணிபுரிந்து கல்வியைச் செழுப்படுத்தி வளப்படுத்துவர்.[3][4]கல்வி மேலாண்மை கல்வியின் தொடக்கநிலை முதல் பல்கலைக்கழக மட்டம் வரை அனைத்து மட்டங்களிலும் வேண்டப்படுகிறது; மேலாண்மை திட்டமிடல், ஒருங்குதிரட்டல், நடைமுறைப்படுத்தல், மீள்பார்வையிடல், மதிப்பீடு செய்தல், நிறுவனத்தைக் கட்டிகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது.

உட்கூறுகள்

தொகு

மனித வளங்கள்

உடல், பொருள் வளங்கள்

சிந்தனை வளங்கள் [5]

பணிகள்

தொகு

மேலாளர் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நோக்கம் அமைத்து சிறப்பான கட்டமைப்பைத் தருதல், திட்டமிடல், செயல்பாடுகளை அமைத்தல், குழு வேலையாக செயல்பாடுகளை ஒருங்கமைத்தல், பணிகள் பற்றிய விளக்கம் தரல், மேலும், பணிகளை அமைத்து வேலையைப் பகிர்ந்தளித்தல் ஆகிய பணிகளை மேலாளவேண்டும். [6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Master of Arts (Educational Management) | National Institute of Education (NIE), Singapore". www.nie.edu.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-10-18.
  2. Connolly, Michael; James, Chris; Fertig, Michael (2017-12-20). "The difference between educational management and educational leadership and the importance of educational responsibility" (in en). Educational Management Administration & Leadership 47 (4): 504–519. doi:10.1177/1741143217745880. பன்னாட்டுத் தர தொடர் எண்:1741-1432. https://researchportal.bath.ac.uk/en/publications/97b65da5-70a6-4b8b-91f6-97d58d198526. 
  3. "Educational Administration". www.rand.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-09.
  4. "What Is Educational Management?" (in en). https://learn.org/articles/What_is_Educational_Management.html. 
  5. [www.yourarticlelibrary.com/educational-management/educational-management.../637 "Educational Management: Meaning, Definition and Types"]. Wikipedia Foundation. 2016. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2017. {{cite web}}: Check |url= value (help)
  6. "Educational Management: Slide Share". Wikipedia Foundation. 2013. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2017.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி_மேலாண்மை&oldid=3744167" இலிருந்து மீள்விக்கப்பட்டது