கல் சொல்லும் கதைகள் (நூல்)

கல் சொல்லும் கதைகள் (நூல்), கல்வெட்டுகளைப் பற்றிய அறிமுக நூல் ஆகும். இந்நூலை எழுதியவர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஆவார். இந்நூலின் மதிப்புரை வழங்கியிருப்பவர் நடன. காசிநாதன் (பதிவாளர், தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை). இந்நூல் ஆசிரியர், கல்வெட்டு ஆய்வுத் துறை தொடர்பான அனைத்து செய்திகளையும் சுருக்கமாக பன்னிரு வழிமுறை என்ற பெயரில் பன்னிரண்டு தலைப்புகளின் கீழ் அடக்கியுள்ளார்.

கல் சொல்லும் கதைகள்
நூலாசிரியர்வெள்ளையாம்பட்டு சுந்தரம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
பொருண்மைகல்வெட்டுகள்
வெளியீட்டாளர்தமிழன்/அருள் பதிப்பகம்/சேகர் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
1972/2009
பக்கங்கள்144

தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுவையில் பிரெஞ்சு ஆட்சிக்காலம் முதலே கல்வெட்டு ஆய்வுத்துறை இயங்கி வருவதையும், அதன் ஆய்வுக்குறிப்புகள் தனிப்புத்தகமாக வருமளவு அதிகமானவை என்றும், அவை இந்நூலில் தரப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

நூலின் சிறப்பு

தொகு

கல்வெட்டுகள் தமிழகத்தில் எவ்வளவு உள்ளன என்பதையும், அவை என்னென்ன மொழிகளில் எழுதப்பெற்றுள்ளன என்பதையும், அவற்றைப் படித்து இவ்வுலகுக்கு உணர்த்தியுள்ள சான்றோர்கள் யாவர் என்பதையும், இன்னும் செய்யப்பட வேண்டிய பணி எவ்வளவு இருக்கிறது என்பதையும் கலைநயத்தோடு எழுதியுள்ளார்.

நூல் ஆசிரியர்

தொகு

நூல் ஆசிரியர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் சிறுவயதில் படிக்கும்போதே (1945-50) தனது தமிழ் ஆசிரியர் திரு.நடேச ஐயரின் கல்வெட்டு ஆர்வத்தால் கல்வெட்டுகள் மீதான ஆர்வம் ஊன்றப்பட்டவர்.

நூலின் அமைப்பு

தொகு
  • கல்லெழுத்துகள்
  • முற்கால எழுத்துகள்
  • எழுத்தும் மொழியும்
  • ஆராய்ச்சிப் பாதை
  • தொல்பொருள் ஆய்வுத்துறை
  • செப்பேடுகள்
  • கல்வெட்டுப் படிக்கும் முறை
  • எழுதினோரும் எழுதிய முறையும்
  • மூன்று கல்வெட்டுகள்
  • பிறமொழிக் கல்வெட்டுகள்
  • பயன் தரும் கதைகள்
  • நாம் செய்ய வேண்டியது என்ன?

நூலின் தகவல்கள்

தொகு
  • காலத்தால் அழியாமல் காப்பாற்றவே கல்வெட்டுமுறை தோன்றியது என்பதில் ஆரம்பித்து நடுகல்லைப் பற்றியும், குன்றுகளில் உள்ள கல்வெட்டுகளைப் பற்றியும் தகவல்கள் உள்ளன.
  • கல்வெட்டெழுத்துக்களின் எழுத்து முறைகளும் அவற்றின் காலகட்டங்களும்
  • இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் முப்பதாயிரம் கல்வெட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு தமிழ்நாட்டில் இருப்பவை.
  • கல்வெட்டுகளை படியெடுக்க தேவைப்படும் பொருள்களும் படியெடுக்கும் முறையும்.
  • தமிழகத்தின் மூன்று முக்கிய கல்வெட்டு செய்திகளான தஞ்சை இராசராச சோழன் செய்த கல்வெட்டு, கணபதி நல்லூர்ச் சாசனம், மணிமங்கலம் சபையோர் சாசனம் ஆகியன.
  • பதின்மூன்றாம் நூற்றாண்டில் (சுமார் கி.பி 1281) எழுதப்பட்ட தமிழ்க் கல்வெட்டில் உள்ள சீனமொழி எழுத்துக்கள். இக்கல்வெட்டு கிடைத்த இடம் சீனாவின் ஹாங்காங்குக்கு வடக்கே உள்ள சுவான்-சூ என்னுமிடம்.
  • இலங்கையில் காலி என்னும் நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு மூன்று மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. அவை: தமிழ் மொழி, பாரசீக மொழி, சீன மொழி. இக்கல்வெட்டின் காலம் கி.பி.1409
  • உத்திரமேரூர் கல்வெட்டும் தகவல்களும்.

கல்வெட்டுகளைப் பற்றிய பிற தகவல்களும் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு