களக்குடி முனியப்பா சாமி கோயில்

களக்குடி முனியப்பசாமி ஆலயம் என்பது இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்திற்கு உட்பட்ட திரு உத்திரகோசமங்கைக்கு அருகில் உள்ள களக்குடி கிராமத்தில் அமைந்துள்ள காவல் தெய்வம் ஆகும்.

வரலாறு தொகு

இக்கோவிலில் இரவில் மட்டுமே தெய்வ வழிபாடு என்ற ஒரு கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். இந்த முனியப்பா சாமியை வழிபடுபவர்கள் மாட்டுக்கறி தின்பது கூடாது என்றும் மீறி மாட்டு கரி திண்டு வழிபட்டால் வம்சமே இல்லாமல் போய்விடும் என்றும் ஒரு நம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள், அது மற்றும் இன்றி இக்கோவிலில் மாட்டு தோளால் செய்யப்பட்ட மேளங்களும் பயன்படுத்தபட மாட்டாது.

இந்த கிராமத்தை சார்ந்தவர்கள் காலம் காலமாக தாங்கள் விவசாய தொழிலை செய்து வரும் பாண்டியர் வாரிசு என்றும் நாங்கள் உழவுக்கு காளை மாடுகளை பயன்படுத்தி வருவதால் அதை தெய்வமாகவும் வழிபடுகிறோம் ஆதலால் நாங்கள் சாபிடுவதில்லை என்றும் மீறி சாப்பிட்டால் முனியப்பன் எங்களை தண்டித்து விடுவார் என்றும் கூறிகின்றனர்.

வழிபாடு முறை தொகு

இக்கோவில் சரியாக ஆவணி மாதம், முதல் வெள்ளிக்கிழமை அன்று 5மணி அளவில் ஆரம்பிக்கப்படும், இக்கோவிலில் சாமியாக ஆடுபவர் சரியாக ஒருமாத காலம் விரதம் இருந்து சுத்தபத்தமாக இருக்கவேண்டும். இக்கோவிலின் திருவிழா அன்று, 5 மணியளவில்  விரதம் இருந்த, அந்த நபருக்கு பம்பை உடுக்கை முழங்க  அருள் ஏற்றப்படும், சாமி அருள் ஏற்றிய பிறகு சரியாக ஒரு மணி நேரம் ஆணி பொருத்திய காலணியை அணிந்துகொண்டு மக்களுக்கு குறி செல்லவேண்டும், மக்களுக்கு தங்களின் குறிகளை சொல்லிய பிறகு விளைச்சல் நிலங்களை சுற்றி முனியப்பன் வளம் வருவார் ஒவ்வொரு வயல்களிலும் எலுமிச்சை கனிகளை வீசி விட்டு இறுதியாக ஆலயத்தை வந்தடைவார். முனியப்பன் வேட்டை ஆடி வருவதற்குள் பொங்கல் இட்டு சிலைக்கு பூஜைகளை செய்து மக்கள் அனைவரும் முனியப்பன் வருகையை எதிர்பார்த்து இருப்பார்கள். முனியப்பன் வந்தவுடன் குலவை இட்டு மீண்டும் பம்பை உடுக்கை முழங்க முனியப்பனை உற்சாகபடுத்தி  பேய் பிடித்தவர்களுக்கு பேய் ஓட்டபடும் அது மற்றும் இன்றி பில்லி சூனியம் போன்ற வற்றையும் நீக்கப்படும். அதன் பிறகு முனியப்பன் தனது ஓங்கிய அருவளால் 7 ஆடுகளையும் ஒரே வெட்டில் வெட்டி முனியப்பன் அந்த இரத்தத்தை பருகுவார். இதன் பிறகு பக்தர்கள் அனைவருக்கும் பஞ்சாமிர்தம் வழங்கி தேங்காய் பலம் உடைத்தும் முனியப்பன் அருள் புரிவார். மறுநாள் காலையில், வீடு வாரியாக ஒருவீடிற்கு தாலா ஒருகிலோ ஆட்டு கரி வழங்கி பொங்கல் கடலை பொறி தேங்காய் பலம் வழங்கப்படும்.