களனி மேம்பாலம்

களனி மேம்பாலம் (Kelaniya Flyover) கொழும்பு - கண்டி நெடுஞ்சாலையில் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் பேலியகொடை தொடருந்துக் கடவைக்கு மேலாக அமைக்கப்பட்டுள்ள ஒரு மேம்பாலம் ஆகும்.

களனி மேம்பாலம்
வகைசாலைவழி
இடம்பேலியகொடை , கொழும்பு, இலங்கை
அமைத்தவர்இலங்கை வீதி அதிகாரசபை
திறக்கப்பட்ட நாள்மார்ச் 25 2008
நீளம்325 மீட்டர்
வழிகள்4

களனிப் பிரதேசத்தில் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டது. இந்த மேம் பாலம் மூலம் தொடருந்துக் கடவையில் காத்திருக்கும் பயணிகளின் நேர விரையம் குறைக்கப்பட்டது. இலங்கை அரசு மற்றும் இலங்கை வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதே போன்று மேலும் 222 மேம்பாலங்களை அமைக்க இருப்பதாக அறிவித்ததுடன், இந்தப் பாலமே இவ்வகையான மேம்பாலங்களின் முதலாம் மேம்பாலம் என்று அறிவித்தது[1].

2008, மார்ச் 25 இல் இந்தப் பாலம் இலங்கை அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 75,000 வாகனங்கள் இந்த மேம்பாலத்தைக் கடந்து செல்கின்றன. 325 மீட்டர் நீளமான இந்தப் பாலத்தில் போக்குவரத்துக்கென் நான்கு வழிகள் இருக்கின்றன[2].

உசாத்துணை

தொகு
  1. Kelaniya flyover declared open
  2. "வீதி அதிகாரசபை, இலங்கை". Archived from the original on 2010-04-16. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=களனி_மேம்பாலம்&oldid=3548598" இலிருந்து மீள்விக்கப்பட்டது