களப்பாளர் என்போர் தமிழ்க்குடி மக்கள். தமிழைத் தாய்மொழியாக உடையவர். அச்சுத களப்பாளர் என்பவர் ஒரு சிவனடியார். களப்பாளர், களமர் என்னும் சொற்கள் களம் என்னும் சொல்லிலிருந்து தோன்றியவை. இங்குக் களம் என்பது நெல்லடிக்கும் களம். போரடிக்கும் களம். [1]

களப்பிரரும், களப்பாளரும் தொகு

களப்பாளர் தான் களப்பிரர் என்றும் களப்பாளர் களப்பிரர் வேறு வேறென்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழகத்தின் வடக்கில் வேங்கடப்பகுதியில் வாழ்ந்த களவர் என்னும் இனத்தவரே களப்பாளர் எனச் சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இருவரும் வேறு என்று கூறுவோரும் உள்ளனர். அதற்கு அவர்கள் பின்வரும் சான்றுகளையும் காட்டுகின்றனர்.

 1. களவர் என்றும், களமர் என்றும் குறிப்பிடப் படுவோர் களத்தில் விளைசல் காணும் உழவர்.
 2. வேங்கடப் பகுதியில் வாழ்ந்தவர் கள்வர்.
 3. களப்பாளர் பண்டைய தமிழ்க்குடி சைவ மரபு.
 4. களப்பிரர் அன்னிய நாட்டினர். அன்னிய மொழியினர். அன்னிய மதத்தினர். (சமணம்).
 5. களப்பாளர் என்போர் வேளாளருக்குத் தலைவராகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய பெருமக்கள். நெற்குன்றவாணருக்குக் களப்பாளராயர் என்னும் பெயரும் உண்டு. [2]
 6. பெரியபுராணத்தில் கூறப்பட்டுள்ள கூற்றுவ நாயனார், சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் ஆகியோர் களப்பாளர் மரபில் தோன்றியவர்கள். [3]
 7. களப்பாளர் உத்தண்டன்

அடிக்குறிப்பு தொகு

 1. ஒப்புநோக்குக - உழைப்பாளர், திறப்பாளர் முதலான சொற்கள்
 2. கிளப்பார் கிளப்ப அடிமடக்காகக் கெழுமிய சொல்
  வளப்பா ம்துரத்துடன் பூக் கமலம் என்று ஆய்ந்து எடுத்த
  களப்பாளர் நெற்குன்றவாணர் அந்தாதிக் கலித்துறையே
  வளப்பார் புகழை வளர்ப்பிக்குமால் தொண்டை மண்டலமே

  (தொண்டைமண்டல சதகம்)
 3. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1973, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. பக். 250. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=களப்பாளர்&oldid=2106093" இருந்து மீள்விக்கப்பட்டது