கழற்சி

தாவர இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Guilandina|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

கழற்சி (Guilandina bonduc, பொதுவாக grey nicker, nicker bean [2] fever nut [3] அல்லது knicker nut என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.[1] இது பெரு வெப்ப மண்டல பகுதிகளில் பரவியுள்ளது.[4] இந்தக் கொடிதாவரமானது 6 m (20 அடி) நீளத்தை அடைந்து மரங்கள் போன்ற பிற தாவரங்கள் மீது ஏறி படரும் ஒரு மரமயவேறி ஆகும். இதன் தண்டுகள் வளைந்த முட்களைக் கொண்டிருக்கும்.[5] இதன் 2 cm (0.8 அங்) அளவுள்ள சாம்பல் நிற விதைகள்,[6] கழற்சிக்காய் என அழைக்கப்படுகின்றன.[7] இந்த விதைகள் நீரில் மிதக்ககூடியவை என்பதால் கடல் நீரோட்டங்களால் கொண்டு செல்லும் அளவுக்கு நீடித்து இருக்கும்.[4]

கழற்சி
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Guilandina
இனம்:
இருசொற் பெயரீடு
Guilandina bonduc
லி.
வேறு பெயர்கள் [1]
  • Caesalpinia bonduc (L.) Roxb.
  • Caesalpinia bonducella (L.) FlemingN J J
  • Caesalpinia crista auct. Amer.
  • Guilandina bonducella L.
கழற்சி இலைகள்
காய்கள் மற்றும் விதைகள்

விளக்கம் தொகு

கழற்சி பற்றிப்படரும் கொடியாகும். இது சுமார் 8 m (30 அடி) நீளம்வரை வளர்கிறது. அல்லது ஒரு பெரிய பரந்த புதராகவோ அல்லது சிறிய புதர் மரமாகவோ வளரும். இதன் தண்டுகள் ஒழுங்கற்ற முறையில் வளைந்த முட்களால் மூடப்பட்டிருக்கும். இதன் இலைக் கொத்துகள் பெரியவையாகவும், இரட்டைச்சிறகு வடிவோடு 40 cm (16 அங்) நீளமான கொத்தாகவும் இருக்கும். இருபக்க இலைக்காம்புகளில் முட்கள் இருக்கும். ஒரு கொத்தில் நான்கு முதல் பதினொரு ஜோடி இறகுவடிவ சிறிய இலைக் கொத்துகள் உள்ளன. அவை 5 முதல் 20 cm (2 முதல் 8 அங்) நீளம் கொண்டவை. இதன் சிற்றிலைகள் 15 முதல் 40 மிமீ (0.6 முதல் 1.6 அங்குலம்) நீளமும், நீள்வட்ட வடிவில் அல்லது முட்டை வடிவிலும் கூர்மையான முனைகள் கொண்டதாக இருக்கும். இத்தாவரத்தில் மஞ்சள் நிறப் பூக்கள் பூக்கும். பூக்களைத் தொடர்ந்து பெரிய, தட்டையான, முட்கள் நிறைந்த பச்சை நிறக் காய்கள் தோன்றும். அவை பின்னர் பழுப்பு நிறமாக மாறும். காய்களில் பொதுவாக இரண்டு, பளபளப்பான, உருண்டையான, சாம்பல் நிற கொட்டைகள் இருக்கும்.[2][8]

பரவலும் வாழ்விடமும் தொகு

கழற்சி பெரு வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியுள்ளது. இது பொதுவாக கடற்கரைக்கு அருகிலும், புதர்க்காடுகளிலும், மணல் திட்டுகளிலும், கரைகளுக்கு மேலும் வளரும்.[9] இது உள்நாட்டிலும், தாழ்நில இரண்டாம் நிலை காடுகளிலும், கிராமங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. மருத்துவ நோக்கங்களுக்காக அல்லது பலகையாட்டங்களில் காய்களாக பயன்படுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்ட விதைகள் தற்செயலாக கைவிடப்பட்டதன் விளைவாக இவை உள்நாட்டில் வளர்ந்திருக்கலாம். இதன் விதைகள் மிதக்கும் தன்மை கொண்டவை. மேலும் கடல் நீரிலும் தன்னைக் காத்துக்கொண்டு மிதந்து சென்று புதிய கடலோரப் பகுதிகளுக்குச் சென்று பரவுகின்றன.[10] கரையில் கிடைக்கும் இந்த விதைகள் சில நேரங்களில் கடல் முத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.[11]

பயன்கள் தொகு

இத்தாவரத்தின் வேர்களில் உள்ள முடிச்சுகளில் நைட்ரஜனை நிலைநிறுத்தும் ஒன்றிய வாழ்வு பாக்டீரியாக்கள் உள்ளன. இது கொடிக்கு ஊட்டமாகப் பயன்படுகிறது மேலும் அருகில் வளரும் மற்ற தாவரங்களுக்கும் நன்மை பயக்கிறது.[10]

இந்த தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. விதைகளில் சத்துகள் மற்றும் காய்ச்சல் அகற்றும் பண்புகள் உள்ளன. இதன் பட்டை மற்றும் இலைகள் காய்ச்சலைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகின்றன. விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் அழகுசாதனப் பொருட்களிலுக்கும் பிற பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது.[3]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1
  2. 2.0 2.1 PlantNet: Royal Botanic Garden, Sydney: Caesalpinia bonduc Accessed 15 March 2018.
  3. 3.0 3.1 "Fever nut". Flowers of India. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  4. 4.0 4.1 Cody, Martin L. (2006). Plants on Islands: Diversity and Dynamics on a Continental Archipelago. University of California Press. பக். 161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-520-24729-1. https://books.google.com/books?id=aw_2IHOD8fQC. 
  5. Oudhia, P., 2007. Caesalpinia bonduc (L.) Roxb. [Internet] Record from PROTA4U. Schmelzer, G.H. & Gurib-Fakim, A. (Editors). PROTA (Plant Resources of Tropical Africa / Ressources végétales de l’Afrique tropicale), Wageningen, Netherlands.
  6. Nelson, Gil (1996). The Shrubs and Woody Vines of Florida: a Reference and Field Guide. Pineapple Press Inc. பக். 177–178. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56164-110-9. https://books.google.com/books?id=Wzmo7cHvhZkC. 
  7. "Gray Nickarbean or Sea Pearl Caesalpinia bonduc". A Seabean Guide. seabean.com. பார்க்கப்பட்ட நாள் 2010-12-07.
  8. "Guilandina bonduc". Native Plants: Hawaii. Archived from the original on 12 நவம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2020.
  9. "Guilandina bonduc L." Flora of Mozambique. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  10. 10.0 10.1 Fern, Ken. "Guilandina bonduc". Useful tropical plants. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
  11. "Gray Nickarbean or Sea Pearl". A Sea-Bean Guide. Archived from the original on 25 December 2008. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கழற்சி&oldid=3928709" இலிருந்து மீள்விக்கப்பட்டது