கழற்சிக்காய்
கழற்சிக்காய் (molucca-beans, Nickernuts) என்பது கழற்சி என்ற ஒரு வகைக் கொடியில் காய்க்கும் ஒரு மூலிகை ஆகும். இதனது ஓடுகள் கடினமானவை. உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கும். இது மிகவும் கசப்பானது. இது கச்சூரம், கெச்சக்காய், வஜ்ரபீஜம் என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது.[1][2][3]
இலக்கியத்தில்
தொகுஇலக்கியத்தில் குறிக்கப்படும் கழங்காடுதல் (தட்டாங்கல்) என்ற விளையாட்டுக்கு இக் கழற்சிக்காய்களே பாவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும் (புறம். 36)
மகளிர்.... முத்தவார்மணற்
பொற்கழங் காடும். (பெரும்பாண். 327 – 35)
தென்பொதிகை மலையில் இத்தாவரம் அதிகமாகக் காணப்படுகின்றது.
இதனையும் காண்க
தொகு- கழற்சி அல்லது வஜ்ஜிரபீஜம், Caesalpinia bonducella
மேற்கோள்கள்
தொகு- ↑ "The Fabulous Nickernuts". Wayne's Word. பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
- ↑ West Word March 2002, retrieved 1 June 2010.
- ↑ "Gray Nickarbean or Sea Pearl". A Sea-Bean Guide. Archived from the original on 25 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-01-28.