மரமயவேறி

நீண்ட வைரஞ்செறிந்த தண்டுகள் கொண்ட ஒரு கொடி

மரமயவேறி (Liana) என்பது நீண்ட வைரஞ்செறிந்த தண்டுகளைக் கொண்ட ஒரு கொடியாகும். இது தரை மட்டத்தில் மண்ணில் வேரூன்றி நேரடி சூரிய ஒளியைத் தேடி மரங்களையும், பிற ஆதரங்களையும் பயன்படுத்தி மேலே ஏறுகின்றன. [1] ஆங்கிலத்தில் இதைக் குறிக்கும் லியானா என்ற சொல் இதன் உயிரியல் வகைப்பாட்டுக் குழுவைக் குறிக்கவில்லை, மாறாக தாவரங்களில் மரம் அல்லது புதர் என்று குறிப்பிடுவதைப் போன்ற ஒரு பொதுச் சொல்லாகும். 

வெப்பமண்டல ஆத்திரேலியாவில் மரமயவேறிகளின் கலப்பு இனங்கள்
இலங்கையின் உடவத்தகெலேவில் மரமயவேறி
ஹவாய், கவாயில் உள்ள குரங்கு ஏணி கொடியின் ( பௌஹினியா கிளாப்ரா ) மீது உருவாகியுள்ள கடல் இதயத்தின் விதானம்
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு காடு முழுவதும் பரவியுள்ள மரமயவேறி

சூழலியல்

தொகு

மரமயவேறிகள் வெப்பமண்டல ஈரமான அகன்ற இலைக் காடுகளின் (குறிப்பாக பருவகால வெப்பமண்டல காடுகள் ) சிறப்பியல்புகளாகும். ஆனால் மிதமான மழைக்காடுகள் மற்றும் மிதமான இலையுதிர் காடுகளிலும் இவை காணப்படுகின்றன. கிளிமேடிஸ் அல்லது வைடிஸ் (காட்டு திராட்சை) வகையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மிதவெப்பமண்டல மரமயவேறிகள் ஆகும். மரமயவேறிகள் காட்டு மரங்களின் உச்சிகளுக்கு இடையில் பாலங்களை உருவாக்கக் கூடியவை. இந்தப் பாலங்களை மரமேறி விலங்குகள் காடு முழுவதும் பாதைகளாக பயன்படுத்துகின்றன. இந்த பாலங்கள் பலத்த காற்றில் இருந்து பலவீனமான மரங்களை பாதுகாக்கும். மரமயவேறிகள் சூரிய ஒளி, நீர், மண்ணில் உள்ள ஊட்டச்சத்து ஆகியவற்றுக்காக வன மரங்களுடன் போட்டியிடுகின்றன. [2] மரமயவேறிகள் இல்லாத காடுகளில் 150% அதிக பழங்கள் காய்க்கும்; மரமயவேறிகள் கொண்ட மரங்கள் இறக்கும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். [3] பௌஹினியா எஸ்பி போன்ற சில லியானாக்கள் பௌஹினியா எஸ்பி போன்ற சில மரமயவேறிகள் அதிக நீளத்தை அடைகின்றன. சுரிநாமில் 600 மீட்டர் வரை வளர்ந்துள்ளது. மரமயவேறியான என்டாடா ஃபேஸ்லாய்டிஸ் 1.5 கிமீ நீளம்வரை எட்டியதை ஹாக்கின்ஸ் உறுதிபடுத்தியுள்ளளார் . மிக நீளமான மோனோகோட் மரமயவேறி கலாமஸ் மனன் (அல்லது கலாமஸ் ஆர்னடஸ்) சரியாக 240 மீட்டர் ஆகும். மரமயவேறிகள் பல்வேறு தாவர குடும்பங்களில் காணப்படுகின்றன.

வாழ்விடம்

தொகு

மரமயவேறிகள் காடுகளில் வளர மரங்களுடன் கடுமையாகப் போட்டியிட்டு, மரங்களின் வளர்ச்சியையும், [4] மற்றும் மரப் பெருக்கத்தையும் வெகுவாக குறைக்கின்றன; [5] மரங்களின் இறப்பைப் பெரிதும் விரைவுபடுத்துகின்றன. [6] மரக் கன்றுகளின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. [4] காடுகளில் மீளுருவாக்கப் போக்கை மாற்றுகின்றன. [7] இறுதியில் மரங்களின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதத்தை பாதிக்கிறன்றன. [8] எறும்புகள் மற்றும் பல முதுகெலும்பில்லா விலங்குகள், பல்லிகள், கொறித்துண்ணிகள், அசையாக்கரடி, குரங்குகள், லெமுர்கள் உள்ளிட்ட பல மரவாழ் விலங்குகளுக்கு வன விதானத்தில் நடமாட வழிகளை மரமயவேறிகள் ஏற்படுத்தித் தருகின்றன. எடுத்துக்காட்டாக, மடகாஸ்கரின் கிழக்கு வெப்பமண்டல காடுகளில், வாழும் பல லெமுர்கள் செங்குத்தான மர இனங்கள் மத்தியில் படர்ந்துள்ள மரமயவேறிகளின் வலையமைப்பில் அதிக அளவில் நடமாடுகின்றன. பல லெமுர்கள் மரமயவேறிகளின் கொண்ட மரங்களை இருப்பிடமாகக் கொள்ள விரும்புகின்றன. [9] பலத்த காற்று வீசும்போது மரமயவேறிகள் மரங்களை சாயந்துவிடாமல் பாதுகாக்கின்றன. [10] இருப்பினும், இவை பலத்த காற்றின்போது மேலும் அழிவை ஏற்படுத்தக்கூடியனவாக இருக்கலாம், ஏனெனில் ஒரு மரம் விழும்போது, மரமயவேறிகளின் இணைப்புகளால் பல மரங்கள் விழும் வாய்ப்பும் உள்ளது. [10]

பொதுவாக, மரமயவேறிகள் படர்ந்திருக்கும் மரங்களுக்கு தீங்கு விளைவிப்பவை. மரமயவேறிகள் கொண்ட மரங்களின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கும். அவற்றினால் உண்டாகும் சிராய்ப்பு, நெரிப்பு ஆகியவற்றினால் மரங்களை நேரடியாக சேதப்படுத்துகின்றன. இலைகளை உண்ணும் விலங்குகளுக்கு மரமயவேறிகள் மரங்களின் உச்சியை அணுகக்கூடியதை எளிதாக்குகின்றன. இந்த எதிர்மறை விளைவுகளால், மரமயவேறிகள் படராமல் இருக்கும் மரங்கள் சில சாதகங்களைப் பெறுகின்றன; சில இனங்கள் மரமயவேறிகளை தவிர்க்க அல்லது உதிர்க்க உதவும் பண்புகளை உருவாக்கிக் கொண்டுள்ளன. [11]

மேற்கோள்கள்

தொகு
  1. "liana". Encyclopædia Britannica. 
  2. Schnitzer, S. A.; Bongers, F. (2002). "The ecology of lianas and their role in forests". Trends in Ecology and Evolution 17 (5): 223–230. doi:10.1016/S0169-5347(02)02491-6. https://epublications.marquette.edu/cgi/viewcontent.cgi?article=1743&context=bio_fac. 
  3. Landers, Jackson (13 June 2017). "Tarzan's Favorite Mode of Travel, the Liana Vine, Chokes Off a Tree's Ability to Bear Fruit". Smithsonian. http://www.smithsonianmag.com/smithsonian-institution/tarzans-mode-travel-liana-vine-chocking-tropical-forests-180963636/. 
  4. 4.0 4.1 Schnitzer, S. A.; Carson (2010). "Lianas suppress tree regeneration and diversity in treefall gaps". Ecology Letters 13 (7): 849–857. doi:10.1111/j.1461-0248.2010.01480.x. பப்மெட்:20482581. https://epublications.marquette.edu/bio_fac/731. 
  5. Wright, S. J.; Jaramillo, A. M.; Pavon, J.; Condit, R.; Hubbell, S. P.; Foster, R. B. (2005). "Reproductive size thresholds in tropical trees: variation among individuals, species and forests". Journal of Tropical Ecology 21 (3): 307–315. doi:10.1017/S0266467405002294. 
  6. Ingwell, L. L.; Wright, S. J.; Becklund, K. K.; Hubbell, S. P.; Schnitzer, S. A. (2010). "The impact of lianas on 10 years of tree growth and mortality on Barro Colorado Island, Panama". Journal of Ecology 98 (4): 879–887. doi:10.1111/j.1365-2745.2010.01676.x. https://epublications.marquette.edu/bio_fac/707. 
  7. Schnitzer, S. A.; Dalling, J. W.; Carson, W. P. (2000). "The impact of lianas on tree regeneration in tropical forest canopy gaps: Evidence for an alternative pathway of gap-phase regeneration". Journal of Ecology 88 (4): 655–666. doi:10.1046/j.1365-2745.2000.00489.x. https://epublications.marquette.edu/cgi/viewcontent.cgi?article=1692&context=bio_fac. 
  8. Visser, Marco D.; Schnitzer, Stefan A.; Muller-Landau, Helene C.; Jongejans, Eelke; de Kroon, Hans; Comita, Liza S.; Hubbell, Stephen P.; Wright, S. Joseph et al. (2018). "Tree species vary widely in their tolerance for liana infestation: A case study of differential host response to generalist parasites". Journal of Ecology 106 (2): 781–794. doi:10.1111/1365-2745.12815. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-0477. 
  9. Rendigs, A.; Radespiel, U.; Wrogemann, D.; Zimmermann, E. (2003). "Relationship between microhabitat structure and distribution of mouse lemurs (Microcebus spp.) in northwestern Madagascar". International Journal of Primatology 24 (1): 47–64. doi:10.1023/A:1021494428294. 
  10. 10.0 10.1 Garrido-Pérez, E. I.; Dupuy, J. M.; Durán-García, R.; Gerold, G.; Schnitzer, S. A.; Ucan-May, M. (2008). "Structural effects of lianas and hurricane Wilma on trees in Yucatan peninsula, Mexico". Journal of Tropical Ecology 24 (5): 559–562. doi:10.1017/S0266467408005221. http://resolver.sub.uni-goettingen.de/purl?gldocs-11858/6978. 
  11. Putz, F. E. (1984). "How trees avoid and shed lianas". Biotropica 16 (1): 19–23. doi:10.2307/2387889. https://archive.org/details/sim_biotropica_1984-03_16_1/page/19. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரமயவேறி&oldid=3761302" இலிருந்து மீள்விக்கப்பட்டது