கழலை நசிவுக்காரணிகள் (Tumor necrosis factors) [அல்லது கழலை நசிவுக்காரணி குடும்பம் (TNF family)] என்பவை உயிரணுக்களின் உயிரிழப்பை (உயிரணு தன்மடிவு; apoptosis) விளைவிக்கக் கூடிய சைட்டோகைன் (உயிரணு தொடர்பி-செயலூக்கி) களின் குழுமத்தைக் குறிக்கும். இக்குடும்பத்தின் முதல் இரண்டு உறுப்பினர்களாகக் கண்டறியப்பட்டவை:
கழலை நசிவுக்காரணி-ஆல்ஃபா (TNFα), இப்பிரிவின் நன்கு அறியப்பட்ட உறுப்பினராகும். ஒற்றைக் குழியத்தால் உருவாக்கப்படுகிற உயிரணுநச்சான கழலை நசிவுக் காரணியானது புற்றுக்கட்டி தேய்வு (tumor regression), நச்சூட்டு அதிர்ச்சி (septic shock), உடல் மெலிவுச் சீர்கேடு (cachexia) ஆகியவற்றில் உள்ளார்ந்தவையாகக் கருதப்படுகிறது[3][4]. இப்புரதமானது முழுமையடைந்த, சுரக்கப்படுகிற சைட்டோகைனில் காணப்படாத அசாதாரண நீளத்துடன், பிறழ்வான சமிக்ஞை வரிசையினைக் கொண்ட முன்-வளரூக்கியாக முதலில் ஆக்கப்படுகிறது[5]. சிறிய நீர்விலக்கும்அமினோ அமிலங்களின் நீட்சியானது கொழுமிய ஈரடுக்குகளில் இந்த முன்-வளரூக்கி நிலைகொள்ள உதவுகிறது[6]. முன்-புரதக்கூறு துணிக்கப்பட்ட பிறகு, முழுமையடைந்த புரதமும், பகுதியாக முறைப்படுத்தப்பட்ட வளரூக்கியும் சுரக்கின்றன[6].
↑Baeyens KJ, De Bondt HL, Raeymaekers A, Fiers W, De Ranter CJ (April 1999). "The structure of mouse tumour-necrosis factor at 1.4 Å resolution: towards modulation of its selectivity and trimerization". Acta Crystallogr. D Biol. Crystallogr.55 (Pt 4): 772–8. பப்மெட்:10089307.
↑Kriegler M, Perez C, DeFay K, Albert I, Lu SD (April 1988). "A novel form of TNF/cachectin is a cell surface cytotoxic transmembrane protein: ramifications for the complex physiology of TNF". Cell53 (1): 45–53. doi:10.1016/0092-8674(88)90486-2. பப்மெட்:3349526.
↑Sherry B, Jue DM, Zentella A, Cerami A (December 1990). "Characterization of high molecular weight glycosylated forms of murine tumor necrosis factor". Biochem. Biophys. Res. Commun.173 (3): 1072–8. doi:10.1016/S0006-291X(05)80895-2. பப்மெட்:2268312.
↑ 6.06.1Cseh K, Beutler B (September 1989). "Alternative cleavage of the cachectin/tumor necrosis factor propeptide results in a larger, inactive form of secreted protein". J. Biol. Chem.264 (27): 16256–60. பப்மெட்:2777790.
↑Waltenbaugh C, Doan T, Melvold R, Viselli S (2008). Immunology. Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. p. 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-7817-9543-5.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)