கவிதா சிங் (Kavita Singh, பிறப்பு: 5 நவம்பர் 1964) என்பவர் கலை வரலாற்றுப் பேராசிரியர் ஆவார். இவர் சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் அழகியல் பள்ளியில் புலத்தலைவராகப் பணியாற்றினார்.

கவிதா சிங்
Kavita Singh
பிறப்பு5 நவம்பர் 1964
விருதுகள்இன்போசிசு பரிசு
கல்விப் பின்னணி
கல்வி நிலையம்மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம்
பஞ்சாப் பல்கலைக்கழகம்
கல்விப் பணி
கல்வி நிலையங்கள்ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்

கல்வி

தொகு

கவிதா சிங் சீமாட்டி சிறீ ராம் கல்லூரியில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், 1987-ல் வடோதராவில் உள்ள மகராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மையில் முதுநிலைப் பட்டத்தினையும் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1996-ல் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

கவிதா சிங் 2001-ல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் இந்திய ஓவியத்தின் வரலாற்றை உள்ளடக்கியது. குறிப்பாக இவர் முகலாய மற்றும் ராஜபுதன ஓவியப் பாணி, மற்றும் இந்தியாவைப் பற்றிய சிறப்புக் குறிப்புடன் அருங்காட்சியகங்களின் வரலாறு மற்றும் அரசியலில் ஆய்வு மேற்கொண்டார்.[1]

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன் சிங், மார்க் வெளியீட்டு நிறுவன ஆராய்ச்சி தொகுப்பாசிரியராகவும், சான் டியாகோ கலை அருங்காட்சியகத்தில் சேகரிப்பு பிரிவில் விருந்தினர் கண்காணிப்பாளராகவும் இருந்தார்.[2] இந்த அருங்காட்சியகம் நியூயார்க்கில் 10 அக்டோபர் 2000 முதல் 7 ஜனவரி 2001 வரை கண்காட்சி ஒன்றை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஒமினா ஒகாடாவின் பட்டியல் வெளியாகியது.[3]

2007ஆம் ஆண்டில், புதிதாகத் திறக்கப்பட்ட தேவி கலை அறக்கட்டளையின் இரண்டாவது கண்காட்சிக்கு கவிதா சிங் தலைமை தாங்கினார். இந்த கண்காட்சிக்கு உலகில் எங்கே என்ற தலைப்பு இருந்தது. கவிதா சிங்கின் அட்டவணை அறிமுகத்தின் சுருக்கப்பட்ட பதிப்பு இணையத்தில் வெளியாகியது.[4] 2009 முதல் 2012ஆம் ஆண்டு வரை, இவர் தி டெம்பிள் அண்ட் தி மியூசியம்: சைட்ஸ் ஃபார் ஆர்ட் இன் இந்தியா" என்ற திட்டத்திற்காக, மேக்ஸ் பிளாங்க் சமூகத்தின் புளோரன்ஸில் உள்ள குன்ஸ்திஸ்டோரிஷ்ஸ் நிறுவனத்தில் பேராசிரியர் முனைவர் கெர்ஹார்ட் வுல்ஃப் மற்றும் ஹன்னா பாடருடன் இணை ஆராய்ச்சியாளராக இருந்தார்.[5]

அங்கீகாரம்

தொகு

2018ஆம் ஆண்டில், கலை வரலாறு மற்றும் காட்சி கலாச்சாரத் துறையில் இவர் செய்த பணிக்காக மனிதநேயத்திற்கான இன்ஃபோசிஸ் பரிசு வழங்கப்பட்டது [6] இவர், கெட்டி ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டெர்லிங் மற்றும் ஃபிரான்சின் கிளார்க் கலை நிறுவனம், வில்லியம்சு கல்லூரி, விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ள இந்திய சேகரிப்புகளுக்கான நேரு அறக்கட்டளை மற்றும் நியூயார்க்கில் உள்ள ஆசியா சமூகம் ஆகியவற்றிலிருந்து ஆய்வு நிதி மற்றும் உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "School of the Arts". Archived from the original on 2 May 2012. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  2. "Power & Desire". sites.asiasociety.org.
  3. Amina Okada, Power and desire : Indian miniatures from the San Diego Museum of Art Edwin Binney 3rd Collection Musée des arts asiatiques (Nice, France); San Diego Museum of Art.
  4. "Global Art and the Museum". Archived from the original on 22 November 2011. பார்க்கப்பட்ட நாள் 5 July 2012.
  5. "Partner Groups in India". www.mpg.de.
  6. "Infosys Prize - Laureates 2018 - Prof. Kavita Singh". www.infosys-science-foundation.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_சிங்&oldid=3676124" இலிருந்து மீள்விக்கப்பட்டது