கவிதா சிங் (அரசியல்வாதி)

கவிதா சிங் என்பவர் ஐக்கிய சனதா தளம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2019 இந்தியப் பொதுத் தேர்தலில் சீவான் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2011 இடைத்தேர்தல் மற்றும் 2015 தேர்தல்களில் தரவுண்டா தொகுதியிலிருந்து பீகார் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்தத் தொகுதி இவரது மாமியார் சக்குமாடோ தேவி வென்ற தொகுதியாகும். சேபி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், திருமணத்திற்குப் பிறகுத் தனது திருமண உடையிலேயே வேட்புமனு தாக்கல் செய்தார். தனது 26 வயதில் சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2] இவர் அரசியல்வாதியாக மாறிய அசய் குமார் சிங்கை மணந்தார்.[3]

கவிதா சிங்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்ஓம் பிரகாசு யாதவ்
தொகுதிசீவான்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு5 மார்ச்சு 1986 (1986-03-05) (அகவை 38)
சீவான், பீகார், இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஐக்கிய சனதா தளம்
துணைவர்அசய் குமார் சின்கா
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள்

தொகு
  1. "MLA son ties knot to gift bride a ticket". Telegraph India. 20 September 2011. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
  2. "Bihar's biwi brigade". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 6 October 2013. பார்க்கப்பட்ட நாள் 22 November 2017.
  3. Jha, Giridhar. "Proxies Of Bahubalis: Bihar Voters Caught Between The Devil And The Deep Sea". Outlook India. பார்க்கப்பட்ட நாள் 2020-04-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிதா_சிங்_(அரசியல்வாதி)&oldid=3742460" இலிருந்து மீள்விக்கப்பட்டது