கவிதா ராதேசியாம்
கவிதா ராதேசியாம் (Kavita Radheshyam) ஓர் இந்திய நடிகையாவார். இயக்குநர் விக்ரம் பட்டின் ஹூ டன் இட் உல்ஜான் என்ற பரபரப்பூட்டும் நாடகத் தொடரில் அறிமுகமானார்.[1] இவர் முதன்மையாக கன்னடம், தமிழ் , இந்தி படங்களில் தோன்றி வருகிறார்.
கவிதா ராதேசியாம் | |
---|---|
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2012–தற்போது வரை |
தொழில்
தொகுஅறிமுகம்
தொகுராதேசியாம் ஒரு நடிப்பு நிறுவனத்தில் 2009 இல் பட்டம் பெற்றார். இவர் சுபாஷ் கயின் விசில் வுட்ஸ் இன்டர்நேஷனலின் கீழ் தயாரிக்கப்பட்ட குறும்படங்களில் தொடர்ந்து நடித்தார். புகழ்பெற்ற இயக்குநர் பைசல் சயீப்பின் இந்தி திரைப்படமான பாஞ்ச் கந்தே மியான் பாஞ்ச் கோடி மூலம் கவிதா அறிமுகமானார். இந்தப் படம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் 2012 ஆம் ஆண்டின் முதல் 10 வெளிப்படையான திரைப்படப் பிரிவின் கீழ் பட்டியலிடப்பட்டது.[2] திரைப்பட தயாரிப்பாளர் ரூபேஷ் பால் தனது காமசூத்ரா 3 டி படத்திற்காக இவரை அணுகினார். ஆனால் இவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார். இவர் 1988ஆம் ஆண்டில் வெளியான கூன் பாரிமாங் என்ற படத்தின் மராத்தி மறு ஆக்கமான பர்லா மல்வத் ரக்தானா என்ற படத்தில் தோன்றினார்.
பைசல் சைஃப் இயக்கிய படங்களில் ராதேஷியம் அடிக்கடி இணைந்து நடித்தார். இதில் பாஞ்ச் கந்தே மியான் பாஞ்ச் கோடி, மெயின் ஹூன் ரஜினிகாந்த், அம்மா , தயாரிப்பில் உள்ள ஷ்ராப் 3 டி ஆகியவை அடங்கும்.
கவிதா பாபி
தொகுபாலியல் கருத்தை கையாண்ட கவிதா பாபி என்ற வலைத் தொடரில் நடித்திருந்தார். இது கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் ஆசியாவில் அதிகம் பார்க்கப்பட்ட வலைத் தொடராக மாறியது. உலகளவில் 600 மில்லியன் பதிவிறக்கங்களை பதிவு செய்ததன் மூலம் இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை விஞ்சியது.[3][4]
சான்றுகள்
தொகு- ↑ "Bold and Beautiful Uljhan – Glamgold". Archived from the original on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Top 10 Bollywood's hottest scenes of 2012 – Top 10 – Hindi – Entertainment – The Times of India". பார்க்கப்பட்ட நாள் 29 September 2016.
- ↑ Desk, Editorial. "Relatable language, believable bodies: What underpins the popularity of adult content on Indian OTT platforms" (in en). firstpost.com. https://www.firstpost.com/living/relatable-language-believable-bodies-what-underpins-the-popularity-of-adult-content-on-indian-ott-platforms-9197421.html.
- ↑ Majumdar, Mayukh. "Uncensored: The Rise Of Indian Erotica On OTT Platforms" (in en). mansworldindia.com. https://www.mansworldindia.com/currentedition/the-rise-of-indian-erotica-on-ott-platforms-gandii-baat-kavita-bhabhi-ullu-alt-balaji-primeflix-hotshots/.