கவ்லா பிந்த் அல் அஸ்வர்
கவ்லா பின்த் அல் அஸ்வர் (Khawla bint al-Azwar; இறப்பு கி.பி.639 ) ராசிதீன் கலீபாவின் படையில் பணிபுரிந்த ஒரு அரபு முஸ்லிம் போர் வீராங்கனையாவார். முஸ்லிம்களின் சிரியப் போரில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மேலும் தனது சகோதரர் திராருடன் இணைந்து போராடினார். இவர் வரலாற்றில் மிகச் சிறந்த பெண் வீரர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார். மேலும் இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மதுவின் தோழியாக இருந்தார். [1]
கவ்லா பிந்த் அல் அஸ்வர் Khawla bint al-Azwar خولة بنت الازور | |
---|---|
1935 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தாரிகுனா பை-உஸ்லுப் கஷாஷிஎன்ற நூலில் கவ்லா பின்த் அல்-அஸ்வர் போரில் சவாரி செய்வதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளார். | |
பிறப்பு | மக்கா, நவீன சவூதி அரேபியா |
இறப்பு | 639 பைலத்-அல்-சாம் |
சார்பு | ராசிதீன் கலீபாக்கள் |
சேவை/ | ராசியுதீன் படை |
சேவைக்காலம் | 629–636 |
ஏழாம் நூற்றாண்டில் பானு அசாத் பழங்குடியினத் தலைவர்களில் ஒருவரான அஸ்வார் அல் அசாதியின் மகளாகப் பிறந்தார். பைசாந்தியப் பேரரசிற்கு எதிராக 636 ஆம் ஆண்டில் நடைபெற்ற யர்மூக் போர் உட்பட பல போர்களில் தனது சகோதரர் திராருடன் இணைந்து போரிட்டார்.[2] போரின் 4 வது நாளில் அவர் பைசாந்திய இராணுவத்திற்கு எதிராக ஒரு பெண்கள் குழுவை வழிநடத்தி அதன் தலைமைத் தளபதியைத் தோற்கடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "15 Important Muslim Women in History". Islamophobia Today. 12 March 2014. Archived from the original on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 21 November 2014.
- ↑ Khan, Mariam (7 March 2020). "Inside the untold history of revolutionary Muslim women". The New Arab (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 February 2024.
நூற்பட்டியல்
தொகு- Kurzman, Charles (2002). Modernist Islam, 1840-1940: A Sourcebook. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195154689.
- Ezzati, A. (2002). The Spread of Islam: The Contributing Factors. ICAS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781904063018.