காஃபெக்லுபென் தீவு

காஃபெக்லுபென் தீவு (டேனிய மொழி: Kaffeklubben Ø; கிரீன்லாந்து மொழி: Inuit Qeqertaat) கிரீன்லாந்தின் வடக்கு முனை அருகில் அமைந்த தீவு. உலகின் மிக வடக்கான நிலமே இத்தீவு. வட துருவத்திலிருந்து 713.5 கிமீ தொலைவில் அமைந்த இத்தீவு 1 கிமீ நீளம், 300 மீ அகலம் கொண்டது.

காஃபெக்லுபென் தீவு
உள்ளூர் பெயர்: ஊடாப் கெகர்டா (Oodaap Qeqertaa)
காஃபெக்லுபென் தீவின் வான்வழிப் புகைப்படம் (செப்டம்பர் 29, 2008)
காஃபெக்லுபென் தீவு is located in கிறீன்லாந்து
காஃபெக்லுபென் தீவு
காஃபெக்லுபென் தீவு
புவியியல்
அமைவிடம்கிரீன்லாந்து
ஆள்கூறுகள்83°39′45″N 30°36′50″W / 83.66250°N 30.61389°W / 83.66250; -30.61389
நிர்வாகம்
மக்கள்
மக்கள்தொகைஆளில்லா நிலம்
மொழிகள்கிரீன்லாந்து மொழி மற்றும் டேனிஷ்
மேலதிக தகவல்கள்
நேர வலயம்
  • UTC -2

1921இல் டென்மார்க்கை சேர்ந்த தேடல் பயணர் லவுகே கோக்கால் முதலாக இத்தீவு காணப்பட்டது. இத்தீவை காஃபெக்லுபென் தீவு, அதாவது "காபி மன்றத் தீவு" (Coffee Club Island) என்று பெயர் வைத்தார்.

இத்தீவின் வடக்கில் சில வேளைகளில் குறுங்காலமாக மணல் தடைகள் உருவாக்கப்படும், ஆனால் இத்தடைகள் மிக வடக்கான நிலமாக அறிவியலாளர்களால் அங்கீகரிக்கப்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஃபெக்லுபென்_தீவு&oldid=3499466" இருந்து மீள்விக்கப்பட்டது