காகம் விடும் திருவிழா
குவாக் தான்பா (Kwaak Taanba) அல்லது குவாக் ஜாத்ரா ( Kwaak Jatra) அல்லது லொய்டம் கும்சபா ( Loidam Kumsaba) அல்லது காகம் விடும் திருவிழா (Crow freeing festival) என்பது மணிப்பூரின் பூர்வீக திருவிழா ஆகும். இத்திருவிழாவின் போது மணிப்பூர் மன்னர் தனது காவலிலிருந்து காகத்தை விடுவிக்கிறார். இந்த நாள் மெய்தி நாட்காட்டியின் மேரா மாதத்தின் 10வது சந்திர நாளில் வருகிறது. இம்பாலில் உள்ள மணிப்பூரின் அரச அரண்மனையான சானா கோனுங்கில் நடைபெறும் பல்வேறு தெய்வீக நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன், பல சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களுடன் இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
காகத்தை விடுவிப்பது இம்பாலில் உள்ள தங்கபட், அரச அகழியில் நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் இப்பகுதியில் செழிப்பையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டுவருவதாகும். இது பண்டைக்காலத்திலிருந்தே நடத்தப்படுகிறது.[1][2][3]
முந்தைய வடிவம்
தொகுமுன்னதாக, இந்த திருவிழா லொய்டம் கும்சபா என்று அழைக்கப்பட்டது மற்றும் காகத்திற்குப் பதிலாக, பகட்டு வண்ண கோழியினை (உள்ளூரில் நோங்குபி என்று அழைக்கப்படுகிறது) திருவிழாவில் பயன்படுத்தினார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kwak Tanba : 29th sep09 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ "Kwak Tanba ritual performed – Manipur News". manipur.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ "Titular King wishes people on Kwak Tanba : 20th oct18 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ "Kwak tanba performed : 15th oct13 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.