காக்கிநாடா துறைமுகம்
காக்கிநாடா துறைமுகம் (Kakinada port) என்பது இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள காக்கிநாடாவில் அமைந்துள்ளது. இது விசாகப்பட்டினம் துறைமுகத்திற்குத் தெற்கே 170 கி.மீ தொலைவில் உள்ளது.[1]
காக்கிநாடா துறைமுகம் | |
---|---|
View of Kakinada port from the Beach | |
முழுத்திரை காட்சிக்கு வரைபடத்தில் கிளிக் செய்யவும் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
அமைவிடம் | ஆந்திரப்பிரதேசம் |
ஆள்கூற்றுகள் | 16°58′30″N 82°16′44″E / 16.975°N 82.279°E |
விவரங்கள் | |
நிறுத்தற் தளங்கள் | 4 + 2 (under construction) |
புள்ளிவிவரங்கள் | |
ஆண்டு சரக்கு டன்னேஜ் | 12.07 மில்லியன் டன் (2012-13) |
வலைத்தளம் www.kakinadaseaports.in |
தகவல்கள்
தொகுகாக்கிநாடா துறைமுகம், பரப்பளவில் ஒரு மிகப்பெரிய நங்கூரத் துறைமுகமமாக விளங்குகிறது. காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகம், காக்கிநாடா மீன்பிடித் துறைமுகம் மற்றும் கப்பல் கட்டும் தளம் போன்றவற்றையும் இத்துறைமுகம் உள்ளடக்கியுள்ளது.[2]
சிறப்புகள்
தொகுகாக்கிநாடா நங்கூரத் துறைமுகம் ஒரு நூற்றாண்டு பழமையான மரபைக் கொண்டது. காக்கிநாடா ஆழ்கடல் துறைமுகம் என்பது ஒரு அனைத்து வகையான தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்ற ஆழ்கடல் துறைமுகம் ஆகும். மேலும், 12 மீட்டர் ஆழமுள்ள கால்வாயைக் கொண்டு உள்ளது. இத்துறைமுகம் 50,000 மெட்ரிக் டன் எடையுள்ள கலன்களை கையாளும் திறன் கொண்டது. 2010-2011 ஆம் ஆண்டில் 10.81 மில்லியன் டன் எடையை கையாண்டு உள்ளது.[1]
அரசுதவி
தொகுசமீபத்தில் ஆந்திர அரசு காக்கிநாடா கடற்கரையை 100 ஏக்கர் அளவிற்கு துறைமுகத்திற்காக விரிவுபடுத்தியுள்ளது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Kakinada Deep Water Port". Department of Ports, Government of Andhra Pradesh. Archived from the original on 2013-01-26. பார்க்கப்பட்ட நாள் 2013-01-25.
- ↑ "Kakinada Anchorage Port". Department of Ports, Government of Andhra Pradesh. Archived from the original on 2013-05-15. பார்க்கப்பட்ட நாள் 2013-01-25.
- ↑ "Kakinada Port new railway station opened finally". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 2013-01-25.