காக்தோவிக் எண்குறிகள்
காக்தோவிக்கு எண்குறிகள் (Kaktovik numerals) அல்லது காக்தோவிக்கு இனுப்பியாக்கு எண்குறிகள் (Kaktovik Iñupiaq numerals[1] என்பது அலாசுக்காவின் இனுப்பியாத் மொழியின் அடி-20 எண்குறிகள் ஆகும். இனூத் மொழி மற்ற எசுக்கிமோ மொழிகளைப் போலவும் கெல்டிக், மாயா மொழிகளைப் போலவும், அடிமானமாக 20 ஐப் பயன்படுத்தி, இருபதின்ம எண்குறி முறைமையைக் கடைப்பிடிக்கிறது. இனூத் எண்ணுதலில் மேலும் 5, 10, 15 ஆகிய துணை அடிமானங்களும் உண்டு. 20 ஐ அடிமானமாக்க் கொண்ட எண்குறிமுறைமையைக் குறிக்க அரபு எண்குறி முறைமை உதவாததால், காக்தோவிக் அலாசுக்கா மாணவர்கள் காக்தோவிக இனூபியாக் எண்குறி முறைமையை உருவாக்கினர்.[2] எனவே இது அல்லாசுக்கா இனூபியாத் மொழியில் பரவியதோடு, இனூபியாத் மொழியின் திசைமொழிகளைப் பேசுவோரிடமும் பரவத் தொடங்கியுள்ளது.[2]
இந்த எண்குறி முறைமை இனூத் மொழியில் எண்ணுதலுக்குப் புத்துயிர்ப்பு ஊட்டியது. பள்ளிகளில் முன்பிருந்த பதின்ம முறைக்கு மாற்றாக அமையலானது.
இங்குள்ள படிமம் 0 முதல் 19 வரையான காக்தோவிக்கு எண்களைக் காட்டுகிறது. பெரிய எண்கள் இந்த சிறிய எண்களைக் கொண்டு இடஞ்சார் குறியீட்டில் காட்டபடுகிறது: இருபது என்ற எண் ஒன்று, சுழியம் (𝋁𝋀), என்றும் நாற்பது என்ற எண் இரண்டும் ஒரு சுழியமும் (𝋂𝋀), நானூறு எண் ஒன்றும் இரண்டு சுழியங்களாகவும் (𝋁𝋀𝋀), எண்ணூறு இரண்டும் இரண்டு சுழியங்களுமாகக் (𝋂𝋀𝋀) குறிக்கப்படுகின்றன.
𝋀 𝋁 𝋂 𝋃 𝋄 𝋅 𝋆 𝋇 𝋈 𝋉 𝋊 𝋋 𝋌 𝋍 𝋎 𝋏 𝋐 𝋑 𝋒 𝋓 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19
சார்ந்த பேச்சு வடிவங்கள் பின்வருமாறு:
0 | 1 | 2 | 3 | 4 |
atausiq | malġuk | piŋasut | sisamat | |
5 | 6 | 7 | 8 | 9 |
tallimat | itchaksrat | tallimat malġuk | tallimat piŋasut | quliŋuġutaiḷaq |
10 | 11 | 12 | 13 | 14 |
qulit | qulit atausiq | qulit malġuk | qulit piŋasut | akimiaġutaiḷaq |
15 | 16 | 17 | 18 | 19 |
akimiaq | akimiaq atausiq | akimiaq malġuk | akimiaq piŋasut | iñuiññaŋŋutaiḷaq |
20 | ||||
iñuiññaq |
(பத்தில் இருந்து கழித்து 9 உருவாக்கப்படுவது போலவே 20 எனும் iñuiññaq இலிருந்து கழித்து 19 உருவாக்கப்படுகிறது. காண்க, இனுபியாத் மொழி.)
கிரீன்லாந்தின் இனூத் மொழியில்:
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
Ataaseq | Marluk | Pingasut | Sisamat | Tallimat | Arfinillit | Arfineq-marluk | Arfineq-pingasut |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
Qulaaluat, Qulingiluat, Arfineq-sisamat |
Qulit | Isikkanillit, Aqqanillit |
Isikkaneq-marluk, Aqqaneq-marluk |
(கிரின்லாந்து வட்டாரத்தைப் பொறுத்து எண்கள் மாறும். மேலும் குரல்உரப்பு மாற்றத்தைப் பொறுத்து எண்களும் மாறும். )
ஒருங்குறி
தொகுஇனூத் எண்குறிகள் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | A | B | C | D | E | F | |
U+1D2Cx | 𝋀 | 𝋁 | 𝋂 | 𝋃 | 𝋄 | 𝋅 | 𝋆 | 𝋇 | 𝋈 | 𝋉 | 𝋊 | 𝋋 | 𝋌 | 𝋍 | 𝋎 | 𝋏 |
U+1D2Dx | 𝋐 | 𝋑 | 𝋒 | 𝋓 |
வெளி இணைப்பு
தொகு- இலவச காக்டோவிக் எழுத்துரு, பார்ட்லியை அடிப்படையாகக் கொண்டது (1997)[1]