காங்கிரசு சட்ட நூலகம்

காங்கிரசு சட்ட நூலகம் என்பது, ஐக்கிய அமெரிக்க காங்கிரசின் சட்ட நூலகம் ஆகும். இந்த நூலகத்தில் அமெரிக்காவின் முழுமையான சட்ட ஆவணங்களும், உலகின் 240க்கு மேற்பட்ட பிற நாடுகளைச் சேர்ந்த தொகுதிகளும் உள்ளன. 1832 இல் நிறுவப்பட்ட இந்நூலகத்தின் 2.9 மில்லியன் தொகுதிகளுக்கு மேலுள்ள[1] சேகரங்கள் தற்போது காங்கிரசு நூலகத்தின் யேம்சு மாடிசன் நினைவுக் கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய சட்ட நூலகம் இதுவே.[2]

காங்கிரசு சட்ட நூலகம்
நாடுஐக்கிய அமெரிக்கா
வகைதேசிய சட்ட நூலகம்
தொடக்கம்1832
அமைவிடம்வாசிங்டன், டி.சி.
கிளைகாங்கிரசு நூலகம்
Collection
அளவு2.8 மில்லியன்
Access and use
Access requirementsபொது அணுக்கம்; மூடிய தட்டுகள்
சுழற்சிபொதுச் சுற்றோட்டத்தில் விடப்படுவதில்லை
Population servedஐக்கிய அமெரிக்க காங்கிரசு உறுப்பினர்களும் பொது மக்களும்
ஏனைய தகவல்கள்
நிதிநிலை$15,797,000
இயக்குநர்ராபர்ட்டா ஐ. சாஃபர்
பணியாளர்கள்91
இணையதளம்law.gov/

வரலாறு தொகு

தொடக்க ஆண்டுகள் தொகு

அரசாங்கம் பிலடெல்பியாவிலிருந்து புதிய நகரமான வாசிங்டன் டி. சி.க்கு மாறிய ஆண்டான 1800 ஆம் ஆண்டில் காங்கிரசு நூலகம் உருவானது. இந்த நூலகத்தின் தொடக்க சேகரங்களில் 20% சட்ட நூல்களாக இருந்தன. இவற்றுட் பெரும் பகுதி ஆங்கிலத்திலும், பன்னாட்டுச் சட்டங்களாகவும் இருந்தன.

இந்த முதல் காங்கிரசு நூலகம் 1814 இல் பிரித்தானியர் மாமன்றக் கட்டிடத்தை எரித்தபோது அழிந்துவிட்டது. இதற்குப் பதிலீடாக தாமசு செபர்சனின் நூலகம் 1815 இல் வாங்கப்பட்டது. இதில் ஐக்கிய இராச்சியத்தில் பதிப்பிக்கப்பட்ட 318 நூல்கள் உட்பட 475 நூல்கள் இருந்தன. இவற்றுள் வெர்ஜீனியா மாநிலச் சட்டங்களும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் அடங்கியிருந்தன. பிற மாநிலங்கள் தொடர்பான நூல்கள் மிகக் குறைவே. நூலகம் மத்திய அரசின் சட்டங்களினதும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களினதும் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தாலும், மாநிலச் சட்டங்கள், மாநில நீதிமன்றத் தீர்ப்புக்கள் போன்றவற்ரைப் பெறுவது பல பத்தாண்டுகளுக்குப் பிரச்சினையாகவே இருந்தது.

மேற்கோள்கள் தொகு

  1. "Annual Report of the Librarian of Congress for Fiscal Year 2012" (PDF). Library of Congress. 2013. ISSN 0083-1565. பார்க்கப்பட்ட நாள் 16 March 2015.
  2. "Library of Congress". Encyclopedia of Library and Information Science (2nd) 3. (2003). CRC Press. 1593–1612. “The Law Library of Congress is the world's largest and most comprehensive law library.” 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கிரசு_சட்ட_நூலகம்&oldid=2251677" இலிருந்து மீள்விக்கப்பட்டது