காங்கோ தமிழ்ச்சாரல்

தமிழ்ச்சாரல் (ஆங்கிலம்: Tamilcharal) என்பது மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ மங்களாட்சி குடியரசு நாட்டில் இருந்து வெளிவரும் தமிழ் மாத இதழ். காங்கோ இளைஞர் பண்பாட்டு மன்றம் என்ற காங்கோ வாழ் தமிழர்களின் பண்பாட்டு மன்றத்தின் வெளியீடாக வருகிறது. 2013 ஆம் ஆண்டு மின்னிதழாக அறிமுகப்படுத்தப்பட்ட இதழானது, 2014 முதல் அச்சு வடிவம் பெற்றது. இதன்மூலம் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து வெளிவரும் முதல் தமிழ் மாத இதழ் என்ற பெருமையை பெறுகிறது.[சான்று தேவை]

தோற்றம் தொகு

காங்கோ வாழ் தமிழர்களுக்கிடையே தமிழின் பெருமைகளை பரப்பவும், தற்கால அரசியல், பொருளாதாரம், நாட்டு நடப்புகள், சமையற்கலை, கதை, கட்டுரை, கவிதை இன்னபிற வடிவிலான அறிவுக் கருவூலங்களைக் கொண்டு சேர்க்கவும் கடந்த 2013 ஆண்டில் அன்றைய காங்கோ தமிழ் இளைஞர் பண்பாட்டு மன்றத்தின் தலைவர் ஜெரால்டு முத்து மற்றும் சௌந்தரராஜன் அவர்களின் உதவியினாலும் மின்னிதழாக வெளிவர ஆரம்பித்தது.

விரிவாக்கம் தொகு

அதன்பின்னர், 2014 ஆண்டிலிருந்து இம்மின்னிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்ற திரு.சிதம்பரம் அவர்களது சீரிய உழைப்பினால் மின்னிதழ் "தமிழ்ச்சாரல் " என்ற தகுதியான பெயரையும் புதுப்பொலிவையும் பெற்று விளம்பரதாரர் உதவியினால் அச்சு வடிவேறி கின்ஷாசா வாழ் தமிழர் ஒவ்வொருவரின் வாசிப்பிற்கும் மாதாமாதம் கிடைக்கப்பெறுகிறது.

கட்டுரையாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், குழந்தை ஓவியர்கள், மகளிர் படைப்பாளிகள் என்று பலருக்கான வாய்ப்புக் களமாக இருக்கும் தமிழ்ச்சாரலானது மன்ற உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் அச்சுவடிவிலும் இணைய நூல் தளத்திலும்[1] படிக்க கிடைக்கிறது.

படைப்பாளர்கள் தொகு

ஆப்பிரிக்காவில் வசித்துவரும், தமிழ் சிறுவர் இலக்கியத்தில் பெரும் பங்காற்றிவரும், கொ மா கோ இளங்கோ அவர்களின் சிறுகதைகள் இடம்பெறுகின்றன.

மேற்கோளகள் தொகு

  1. "Africa Tamil Charal Magazine - Get your Digital Subscription". Magzter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கோ_தமிழ்ச்சாரல்&oldid=3589443" இலிருந்து மீள்விக்கப்பட்டது