காசாமலை
திருச்சிராப்பள்ளி நகர்பகுதி
காசாமலை (Khajamalai) அல்லது காஜாமலை என்பது இந்தியாவின் தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி நகரில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். காசாமலை இதன் மையப் பகுதியில் அமைந்துள்ள பாறை அல்லது மலைக் குன்றிலிருந்து இதன் பெயரைப் பெற்றது. முசுலீம் சூபி குவாஜா சையத் அகமது ஷா ஆலியா இங்கு அடக்கம் செய்யப்பட்டார். இந்த மலைப்பகுதி ஆங்கிலேயர் ஆட்சியின் போது பகிர் தோப்பு என்று அழைக்கப்பட்டது.
காசாமலை
காசாபாடி | |
---|---|
நகர்ப்பகுதி | |
ஆள்கூறுகள்: 10°46′39″N 78°41′13″E / 10.77750°N 78.68694°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் இந்தப் பகுதியில் அமைந்துள்ளது. அண்ணா விளையாட்டு அரங்கம், பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி மற்றும் சட்டக்கல்லூரியும் இப்பகுதியில் அமைந்துள்ளன.[1][2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Prasad, G. (25 January 2011). "Veteran hockey players delighted with synthetic turf in Tiruchi". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 ஜனவரி 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110130010059/http://www.hindu.com/2011/01/25/stories/2011012559450200.htm.
- ↑ Prasad, G. (16 June 2008). "Anna Stadium to get astro turf". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 ஜூன் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080618170713/http://www.hindu.com/2008/06/16/stories/2008061650310100.htm.