காசிங்கா தினம்
காசிங்கா தினம் (Cassinga Day) என்பது காசிங்கா படுகொலையை நினைவுகூரும் விதமாக நமீபியா நாட்டில் அனுசரிக்கப்படும் ஒரு நாளாகும். ஆண்டுதோறும் மே மாதம் 4 ஆம் தேதியன்று இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. நமீபியாவில் இந்நாள் ஒரு பொதுவிடுமுறை நாளுமாகும். 1978 ஆம் ஆண்டு தெற்கு அங்கோலாவில் உள்ள காசிங்காவில் இருந்த நமீபியாவின் தென் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பினரின் தளத்தை தென்னாப்பிரிக்க பாதுகாப்புப் படை தாக்கியபோது தோராயமாகக் கொல்லப்பட்ட 600 பேரை இந்நாள் நினைவுகூர்கிறது.[1] [2] விந்தோக்கு நகரத்திற்கு வெளியே உள்ள ஈரோசு ஏக்கர் என்ற போர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் நினைவுச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களில் பல முக்கிய தேசிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். தற்போதைய சனாதிபதி ஏச்சு கீங்கோப் மற்றும் முன்னாள் சனாதிபதிகள் இபிகேபுன்யே பொகம்பா மற்றும் சாம் நுசோமா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.[3]
காசிங்கா தினம் Cassinga Day | |
---|---|
கடைபிடிப்போர் | நமீபியா |
நாள் | 4 மே |
நிகழ்வு | ஆண்டுதோறூம்l |
1978 மே 4
தொகு1978 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் தேதியன்று காலை, தென்னாப்பிரிக்க தற்காப்புப் படை காசிங்கா கிராமத்திற்கு அருகிலுள்ள காசிங்கா முகாமில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதைத் தொடர்ந்து வான்குடை மிதவை படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். இந்த முகாமில் நாடு கடத்தப்பட்ட தென் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் அமைப்பு அனுதாபிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த தாக்குதலில் 165 ஆண்கள், 294 பெண்கள் மற்றும் 300 குழந்தைகள் உயிரிழந்தனர். இதே நாளில், அருகிலுள்ள வியட்நாமின் தசெடெக்வேலா கிராமத்தின் முகாமும் தாக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு நிலவரப்படி கல்லறைகள் குறிக்கப்படவில்லை ஆனால் நமீபிய அரசாங்கம் ஒரு நினைவு தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Let's Review Our National Holidays in The Namibian, 27 April, 2007
- ↑ The Commonwealth Yearbook பரணிடப்பட்டது செப்டெம்பர் 27, 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Namibian national reconciliation policy in Xinhua News Agency, 21 September, 2006.
- ↑ Muraranganda, Elvis (3 May 2016). "Remembering Cassinga Day". New Era: p. 3. https://www.newera.com.na/2016/05/03/remembering-cassinga-day/.[தொடர்பிழந்த இணைப்பு]