காசிநாதன் பாஸ்கரன்

இந்திய கபடி விளையாட்டு வீரர் | கள்ளர் குலத்தில் பிறந்தவர்

காசிநாதன் பாஸ்கரன் (Kasinatha Baskaran) அல்லது கே. பாஸ்கரன் (பிறப்பு: ஜூன் 28, 1968) என்று அழைக்கபடும் இவர் ஒரு தொழில்முறை இந்திய கபடி விளையாட்டு வீரராவார். இவர் சர்வதேச விளையாட்டுகளில் இந்திய தேசிய ஆண்கள் கபடி அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். கபடி பயிற்சியாளராக வழிகாட்டுகிறார். இவர் தேசிய மற்றும் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளார். இவர் சர்வதேச அணிகள் மற்றும் கபடி போட்டிக் குழுக்களின் உரிமையாளர்களுக்கு தொழில்முறை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் இந்திய தேசிய ஆண்கள் கபடி அணியின் பயிற்சியாளராகவும், புரோ கபடி உரிமையாளரான தமிழ் தலைவாசின் பயிற்சியாளராகவும் பணியாற்றுகிறார்.

பாஸ்கரன்
பாஸ்கரன் உலகக் கோப்பை 2016 வென்றார்
தனிநபர் தகவல்
முழு பெயர்பாஸ்கரன் காசிநாதன்
தேசியம்இந்தியன்
பிறப்பு28 சூன் 1968 (1968-06-28) (அகவை 56)
சாலியமங்கலம், சுலியக்கோட்டை, தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
கல்விஅரசு மேல்நிலைப் பள்ளி அம்மாப்பேட்டை
தொழில்பயிற்சியாளர், இந்திய தேசிய கபடி அணி
ஆண்டுகள் செயலில்1989 - 2002
உயரம்1.85 m (6 அடி 1 அங்)[1]
எடை95 கிலோகிராம்கள் (209 lb)
வலைத்தளம்[1]
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுசடுகுடு
இடம்பன்முக வீரர்
Leagueபுரோ கபடி கூட்டிணைவு
கழகம்தமிழ் தலைவாஸ்
அணிஇந்திய தேசிய கபடி அணி
தொழில்முறையானது1988
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசைஉலகில் முதலிடம்

இவர் ஒரு தீவிர விளையாட்டு ஆர்வலர் மற்றும் ஒரு பயிற்சியாளராக இருப்பதைத் தவிர, இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு பயிற்சி அளிப்பதில் கவனம் செலுத்துகிறார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

கே.பாஸ்கரன், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சையில் உள்ள சூலியகோட்டையில் பிறந்த காசிநாதன் சிட்டாட்சியார்-கிருஷ்ணம்மாள் தம்பதியினரின் நான்காவது குழந்தையாவார். இவர் அம்மாப்பேட்டை சாலியமங்கலம் சுலியக்கோட்டை அரசுப் பள்ளியில் படித்தார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பெங்களூர் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் சிறப்பு பயிற்சியாளராக பட்டம் பெற்றார்.

இவர் 12 வயதில் கபடி விளையாடத் தொடங்கினார். இவர் தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியபோது புகழ் பெற்றார். இந்தியன் புரோ கபடி குழுவுக்கு பயிற்சியாளராகவும், 2016 கபடி உலகக் கோப்பையில் பயிற்சியாளராகவும் இணைந்ததிலிருந்து ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார். [2]

கே. பாஸ்கிரன் பி. பிரபா என்பவரை மணந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: மகன் பி. சூர்யா, ஒரு வட்டெறிதல் தடகள வீரர் மற்றும் இரண்டு மகள்கள் பி. நீதா மற்றும் பி. நீராஜா இருவரும் கூடைப்பந்து விளையாடுகிறார்கள்.

ஆட்டக்காரர்

தொகு

பாஸ்கரன் தனது பள்ளி நாட்களில் திரு. சுவாமிநாதன் மற்றும் திரு. சண்முகசுந்தரம் ஆகியோரால் பயிற்றுவிக்கப்பட்டார். தமிழக கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பணியாளருமான இராஜராஜேந்திரன் என்பவரால் கபடி விளையாடுவதற்கு இவர் ஈர்க்கப்பட்டார். குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற இவர் 1984-85ல் இரண்டாம் இடத்தையும் 1985-86ல் முதல் இடத்தையும் பிடித்தார். 1987 ஆம் ஆண்டில் இவருக்கு மதுரை பாண்டியன் போக்குவரத்துக் கழகத்தில் விளையாட்டு ஒதுக்கீட்டில் பணி நியமனம் வழங்கப்பட்டது. 1989-92 வரை, இவர் சென்னை ஐ.சி.எப்பிற்காக விளையாடினார். 1992-98 காலப்பகுதியில் இவர் ஒரு மதுரை மத்திய கலால் துறையில் காவல் ஆய்வாளராக பணி புரிந்தார். 2003-05 முதல் அவர் ஏர் இந்தியாவுக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடினார்.

பயிற்சியாளர்

தொகு

2004 ஆம் ஆண்டில், பாஸ்கரன் தேசிய விளையாட்டு நிறுவனத்தில் ஒரு சிறப்பு பயிற்சியாளராக பட்டம் பெற்றார். 2009 ஆம் ஆண்டில் இளையோர் கபடிக் குழுவின் இந்திய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்த காலகட்டத்தில் சர்வதேச கவனத்திற்கு வந்த இவர் தாய்லாந்து தேசிய கபடி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் அவர் மலேசிய தேசிய கபடி அணியின் பயிற்சியாளராக இருந்தார். இவர் 2010 ஆசிய விளையாட்டுக்களுக்கான தயாரிப்பு மற்றும் தேர்வு செயல்முறைகளுடன் முக்கியமாக தொடர்புடையவர் ஆவார். 2014 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடைபெற்ற கடற்கரை ஆசிய விளையாட்டு 2014 க்கான இந்திய ஆண்கள் கபடி அணிக்கு வழிகாட்டினார். இந்த நிகழ்வில் அணி வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.

புரோ கபடி போட்டிகள்

தொகு

2014 ஆம் ஆண்டில் புரோ கபடி போடிகள் தொடங்கியது. கபடிக்கான விளையாட்டு நிகழ்வு இந்தியாவின் பல்வேறு கபடி உரிமையாளர்களிடையே விளையாடியது. தொடக்க நிகழ்வில் பிங்க் பாந்தர்ஸ் உரிமையை அதன் முதல் வெற்றிக்கு கே. பாஸ்கரன் வழிநடத்தினார். 2014 முதல் 2016 வரை பிங்க் பாந்தர்ஸ் பயிற்சியாளராக இருந்தார். இவர் 2016 முதல் புனேரி பால்டன்ஸ் உரிமையைப் பயிற்றுவிக்கத் தொடங்கினார். நான்காவது பருவத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். [3] [4] [5] புரோ கபடி 2017 இல் தமிழ் தலைவாசின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். [6]

புரோ கபடி கூட்டிணைவின் விசாக் வேர்ல்விண்ட்ஸின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தார்.

உலகக் கோப்பை

தொகு

சர்வதேச கபடி போட்டிகளில் இந்தியா மறுக்கமுடியாத வெற்றியை பெற்றுள்ளது. 2016 கபடி உலகக் கோப்பை பன்னிரெண்டு நாடுகளிடையே நடத்தப்பட்டது. இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளராக பாஸ்கரன் செயல்பட்டார். அந்த அணி இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெறியாளாராக மாறியது.

குறிப்புகள்

தொகு
  1. "FROM OBSCURITY, KABADDI PLAYERS NOW REVEL IN STARDOM". Bangalore Mirror. 17 June 2015. http://www.bangaloremirror.com/sports/others/From-obscurity-kabaddi-players-now-revel-in-stardom/articleshow/47695221.cms. பார்த்த நாள்: 11 February 2016. 
  2. "Interview with Kasinathan Baskaran: "All the teams in the Pro Kabaddi League are the same this season"". https://in.news.yahoo.com/interview-kasinathan-baskaran-teams-pro-145638117.html. 
  3. "Interview with Kasinathan Baskaran: "All the teams in the Pro Kabaddi League are the same this season"". Sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  4. "Will government announce rewards for Kabaddi team ?". Sportstarlive.com. 2016-10-23. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  5. "tamil nadu: Nurtured in rural Tamil Nadu, kabaddi players make a mark at World Cup". Timesofindia.indiatimes.com. 2016-10-04. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிநாதன்_பாஸ்கரன்&oldid=4105268" இலிருந்து மீள்விக்கப்பட்டது