காசி மற்றும் செயிந்தியா மலைகள்

இந்திய மலைகள்
(காசி மற்றும் செயிந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காசி மற்றும் செயிந்தியா மலைகள் என்பன மலைகள் நிறைந்த பகுதியாகும், இதன் பெரும் பகுதி அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களில் அமைந்துள்ளது[1].

இந்திய புவியமைப்பு
காசி மற்றும் செயிந்தியா மலைகள்
மாவட்டம் அசாம், பிரித்தானிய இந்தியா
1912–1947
Location of காசி மற்றும் செயிந்தியா மலைகள்
Location of காசி மற்றும் செயிந்தியா மலைகள்
காசி மற்றும் செயிந்தியா மலைகள்
வரலாறு
 •  செற்கு வங்கம் மற்றும் அசாம் பிரிக்கப்பட்டது 1912
 •  இந்தியா சுதந்திரம் 1947
பரப்பு
 •  1901 15,947 km2 (6,157 sq mi)
Population
 •  1901 1,97,904 
மக்கள்தொகை அடர்த்தி 12.4 /km2  (32.1 /sq mi)
Public Domain இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது:  பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
காசி, 1947

செயிந்தியா மலைகள்

தொகு

காசி மலைகளின் கிழக்கே செயிந்தியா மலைகள் அமைந்துள்ளன. இப்பகுதியை முன்னொரு காலத்தில் ஆட்சி செய்தவர்கள் செயிந்தியாபூர் மன்னர். அவரது குளிர்கால தலைநகரம் தற்பொழுது வங்கதேசத்தில் உள்ளது. அவரது அரண்மனை போர்காட்டில் உள்ளது.

செயிந்தியா மலை மாவட்டத்தின் ஒரு பகுதியாக செயிந்தியா மலைகள் இருந்தது. 31 சூலை 2012 இல் இந்த மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டது, அவை கிழக்கு செயிந்தியா மலைகள் மற்றும் மேற்கு செயிந்தியா மலை ஆகும்.

காசி மலைகள்

தொகு

காரோ மலைகளின் கிழக்கே அமைந்துள்ளது காசி மலைகள். இது இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ளது மற்றும் இவை பட்கை மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது[2].

இப்பகுதியில் குடியிருப்பவர்கள் காசி மலைவாழ் இன மக்கள் ஆவார்கள். இந்த மலைகளில் தான் உலகிலேயே ஈரமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சி அமைந்துள்ளது[3].

காசி மலைகள் மாவட்டத்தின் கீழ் இவைகள் கொண்டுவரப்பட்டு 28 அக்டோபர் 1976-ல் கிழக்கு காசி மலை மற்றும் வடக்கு காசி மலை என் இரண்டாக பிரிக்கப்பட்டது[4].

இதன் உயரமான சிகரம் லும் சில்லிங், இதன் உயரம் 1,968 மீட்டர்கள்(6,457 அடி)[5]. இது சில்லாங் நகருக்கு தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது[6].

மேற்கோள்கள்

தொகு
  1. "Integration of the North East: the State Formation Process" (PDF). Archived from the original (PDF) on 2014-02-19. பார்க்கப்பட்ட நாள் 2017-08-20.
  2. Sarkar, A.B. Chaudhuri & D.D. (2003). Megadiversity conservation : flora, fauna, and medicinal plants of India's hot spots. Delhi: Daya Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170353017.
  3. Bhaumik, Subir (2003-04-28). "World's wettest area dries up" (stm). South Asia News (Calcutta: BBC). http://news.bbc.co.uk/2/hi/south_asia/2977169.stm. பார்த்த நாள்: 2008-02-21. 
  4. Bhattacharjya, Umasaday. Local government in Khasi Hills. Vivek, 1980. p. 263.
  5. Karlsson, Bengt G. (2010). Unruly hills : a political ecology of India's northeast. New York: Berghahn Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0857451049.
  6. Riggins, ed. by Stephen Harold (1990). Beyond Goffman : studies on communication, institution, and social interaction. Berlin [u.a.]: Mouton de Gruyter. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3110122081. {{cite book}}: |first= has generic name (help)