காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் சௌனகேசர் கோயில் (சௌனகேசம்) என்றழைக்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை திருக்காஞ்சீஸ்வரர் எனும் மற்றொரு பெயருடனும் வழங்கப்படுகிறது. இது, புத்தேரித் தெருவை அடுத்துள்ள கவுனசேகர் தெருவில் உள்ளது. கிழக்கு பார்த்த சன்னதியாக அறியப்பட்ட இக்கோவில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

காஞ்சிபுரம் சௌனகேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் சௌனகேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சௌனகேசர், சவுனகேஸ்வரர், திருக்காஞ்சீஸ்வரர்.
தீர்த்தம்:சகோதர தீர்த்தம்.

இறைவர், வழிபட்டோர்

தொகு
  • இறைவர்: சௌனகேசர், சவுனகேஸ்வரர், திருக்காஞ்சீஸ்வரர்.
  • தீர்த்தம்: சகோதர தீர்த்தம்
  • வழிபட்டோர்: சௌனக முனிவர்.

தல வரலாறு

தொகு

கவுனக முனிவர் தம்பெயரால் சிவலிங்கம் நிறுவி போற்றி மலநோய் நீங்க் முக்தி எய்தினர். சகோதர தீர்த்தம் அக்னிதேவன் தான் ஒளித்திருப்பதற்கு இக்குளத்தருகே வருணணை தன்னையொருவருக்கும் காட்டக்கூடாதென்றும் எனக்கு நீ சகோதரனல்லவா என்றும் பிரார்த்தித்து ஒளிந்திருந்தனராதலால் அக்குளம் சகோதர தீர்த்தமெனப் பெயர் பெற்றதென்பது வரலாறாகும்.[2]

தல விளக்கம்

தொகு

சவுனகேசம் எனும் இது, சவுனக முனிவர் தம்பெயராற் சிவலிங்கம் நிறுவிப் போற்றி மலநோய் நீங்கி முத்தி எய்தினர். இக்கோயில் புத்தேரி தெருவை அடுத்துள்ள சவுனகேசர் தெருவில் உள்ளது.[3]

தல பதிகம்

தொகு
  • பாடல்: (சவுனகேச வரலாறு)
விளம்புவன் னீசந் தனக்குமேல் பாங்கர் விழைதகுஞ் சவுனகேச்
சரத்திற், களங்கனி விளர்ப்ப விடங்கிடந் திமைக்குங் கறைமிடற்
றடிகளை இருத்தி, வளம்பயில் காதற் சவுனக முனிவன் மரபுளி
அருச்சனை யாற்றி, உளம்பயில் மலநோய் தவிர்ந்துபேரின்ப வீடுபே
றுற்றதவ் வரைப்பு.
  • பொழிப்புரை:
பேசப்பெறும் வன்னீசத் தலத்திற்கு மேற்கில் விரும்பத்தக்க சவுனகேசத்
தலத்தில், களாம்பழமும் வெளிறுபட நீலம் காட்டும் விடங் கண்டத்தில்
தங்கி ஒளிவிடும் திருநீலகண்டப் பெருமானை எழுந்தருளுவித்து நலமிகும்
பேரன்புடைய சவுனக முனிவர் விதிப்படி அருச்சனை செய்து உயிரைப்
பற்றியுள்ள ஆணவ மலத்தான் ஆகும் பிறவி நோய் நீங்கிப் பேரின்ப
வீட்டினைத் தலைப்படுதற் கிடனாகியது அத்தலம்.[4]

அமைவிடம்

தொகு

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் புத்தேரித் தெருவை அடுத்துள்ள கவுனசேகர் தெருவில் உள்ள தானப்ப நாயகன் தெருவில் இக்கோவில் தாபிக்கப்பட்டள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், கச்சபேசுவரர் கோயிலின் மேற்கு திசையில் கிழக்கு பார்த்த சன்னதியாக இக்கோவில் அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் பாகம் 1b | 23. சேகாதர தீர்த்தப் படலம் (902 - 911) | 911 சவுனேகச வரலாற.
  2. "palsuvai.net | 70. ஸ்ரீ சவுனகேஸ்வரர் (ஸ்ரீ திருக்காஞ்சீஸ்வரர்)". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.
  3. tamilvu.org | காஞ்சிப் புராணம் | திருத்தல விளக்கம் | சவுனகேசம் | பக்கம்: 819.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | சகோதர தீர்த்தப் படலம் | சவுனகேச வரலாறு | பாடல் 10 | பக்கம்: 280.
  5. "shaivam.org | சௌனகேசம் | சௌனகேசர் திருக்கோவில்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-03-12.

புற இணைப்புகள்

தொகு