காஞ்சிபுரம் பிறவாதீசுவரர் கோயில்

காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் பிறவாதீசுவரர், பிறவாத்தானேசுவரர் (பிறவாத்தானம்) என்று அறியப்படுவது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும் . மேலும், சிவகாஞ்சி வெண்குளம் தென்கரையில் மேற்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது [1]

காஞ்சிபுரம் பிறவாத்தானம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பிறவாத்தானம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிறவாதீசுவரர்.

இறைவர், வழிபட்டோர் தொகு

  • இறைவர்: பிறவாதீசுவரர், பிறவாத்தானேசுவரர்.
  • வழிபட்டோர்: வாமதேவர்.

தல வரலாறு தொகு

வாமதேவ முனிவர் பிறப்புக்கு அஞ்சி, (பயந்து) பிறவாமையை அளிக்குமாறு தன் தாயின் கருவிலிருக்கும்போதே, இறைவனை எண்ணி (நினைத்து) வேண்டினார். இறைவன் கருவுக்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்கு காட்சி தந்து, "காஞ்சிக்கு வந்து எம்மை பூசித்தால் பிறவியணுகா"தென்று அருளிச்செய்தார். வாமதேவரும் அவ்வாறே பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்பது தல வரலாறாகும். இதனாலேயே இத்தலம் பிறவாத்தானம் எனப்பட்டது.[2]

அமைவிடம் தொகு

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் வடக்கு பகுதியில், பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலைலிருந்து காஞ்சிபுரத்தை இணைக்கும் சாலையில், பெரிய காஞ்சிபுரம் கம்மாளத் தெரு காமராஜ் நகர் குடியுறுப்பு பகுதியில் உள்ளத. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. Project Madurai, 1998-2008 | 49. பிறவாத்தானப் படலம் 1651 - 1660
  2. tamilvu.org | காஞ்சிப் புராணப் படல அட்டவணை | பிறவாத்தானப் படலம் 488
  3. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | பிறவாத்தானம் பிறவாதீசுவரர் திருக்கோவில்)". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-03-03.

புற இணைப்புகள் தொகு