காடு அனுமந்தர் கோவில் தாராபுரம்

தமிழ்நாட்டின் தாராபுரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவில்

காடு அனுமந்தர் கோயில் (Sri Kadu Hanumantharaya Swamy Temple) தமிழ்நாட்டின் தாராபுரத்தில் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு இந்துக் கோயிலாகும். [1]

காடு அனுமந்தர் கோவில்

தொகு

1460 முதல் 1530 வரை வாழ்ந்த அனுமார் பக்தரான சிறீவியாசராயர் என்பவர் இந்திய துணைக்கண்டத்தில் பல அனுமார் சிலைகளை நிர்மானித்தார் எனவும் இக்கோயிலின் சிலை அவரால் 89வதாக நிர்மானம் செய்யப்பட்டது என்று கூறபடுகிறது. காட்டு பிரதேசமாக விளங்கியதால் "காடு" என்னும் அடைமொழியுடன் கூறப்படுகிறது.

உருவச்சிலை

தொகு

மூர்த்தி 7 அடி உயரம் 3 அடி அகலம் கொண்டதாகவும், இரு பாதங்கள் வடக்கு நோக்கியும், இடுப்பில் மணி சலங்கை கட்டப்பட்டும், வலது இடுப்பில் பிச்சுவா கத்தியும், கழுத்தில் சுதர்சன சாலகிராம மாலைகளும், இடது கை சௌகந்திகா மலர் ஏந்தியும் முகம் வடக்கு திசை நோக்கியும் வலது புறம் சக்கரம், இடது புறம் சங்கும் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்திலுள்ள் வாலானது வலது கையைத் தொட்டு முகத்தை நோக்கி மேல்நோக்கிச் சென்று பின் கீழ்நோக்கி வந்து இடது கையை தொட்டு முடிவடைகிறது.[2]

சிறீ இலட்சுமி நரசிம்மர் சந்நிதி

தொகு

மூல மூர்த்தியாக அனுமன் விளங்கினாலும் பிரம்மோத்சவமாக நரசிம்மர் சன்னதியும் உள்ளது.

பிருந்தாவனங்கள்

தொகு

முக்கிய திருவிழாக்கள்

தொகு

பூஜை முறை

தொகு

மாத்வ சம்பிரதாயம்.

மேற்கோள்கள்

தொகு