காடு மல்லேசுவர கோயில்
காடு மல்லேசுவரர் கோயில் (Kadu Malleshwara Temple)(கன்னடம்: ಕಾಡು ಮಲ್ಲೇಶ್ವರ) என்பது கி. பி. 17ஆம் நூற்றாண்டு இந்துக் கோயில் ஆகும். இந்தியாவின் கருநாடகம் மாநிலம், பெங்களூரு, மல்லேசுவரம் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
காடு மல்லேசுவரர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கர்நாடகம் |
மாவட்டம்: | பெங்களூரு |
அமைவு: | மல்லேசுவரம் |
ஆள்கூறுகள்: | 13°00′18″N 77°34′17″E / 13.004966°N 77.5714462°E |
கோயில் தகவல்கள் |
விளக்கம்
தொகு17ஆம் நூற்றாண்டில் மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரரான வெங்கோஜியால் திராவிட கட்டிடக்கலை பாணியில் இக்கோயில் கட்டப்பட்டது.[1] சிவன் இங்கு மல்லிகார்ஜுனன் என்று போற்றப்படுகிறார். இக்கோயிலின் ஒரு பகுதியாக நந்தீஸ்வர தீர்த்த கோயிலாக (பசவ தீர்த்தம்) இக்கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது. இக்கோயில் அருகே விருசாபாவதி ஆற்றின் பிறப்பிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
திருவிழா
தொகுஇந்த கோயிலின் முக்கிய ஆண்டு விழாவாக மகா சிவராத்திரி உள்ளது. இந்த கோவிலின் பெயரிலேயே இந்தப் பகுதி மல்லேசுவரம் என்று இடம் அழைக்கப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dasharathi, Poornima. "A whiff of Malleswaram". Citizen Matters. பார்க்கப்பட்ட நாள் 20 October 2012.
- ↑ "Temples of Malleshwaram – Venugopal Swamy, Kaadu Malleshwara and Sai Baba Temple". Archived from the original on 23 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 20 October 2012.