காட்சிக்கு-காசு
காட்சிக்கு-காசு (Pay-per-view, PPV) அல்லது காட்சிக்கு கட்டணம் எனப்படுவது தொலைக்காட்சி சந்தாதாரர்கள் கட்டணம் செலுத்தி தாங்கள் விரும்பும் நிகழ்ச்சியை தனிப்பட்ட முறையில் காணக்கூடிய சேவையாகும். விளம்பரத் தடங்கல்கள் இன்றி காணக்கூடியதாகவும் இருக்கும். விரும்பிய நேரத்தில் காணக்கூடிய கோரிய நேரத்து ஒளிதம் அமைப்புகளைப் போலன்றி, இச்சேவை வழங்குனர் கட்டணம் செலுத்திய அனைவரும் ஒரே நேரத்தில் காட்சியைக் காணுமாறு ஒளிபரப்புவர். இந்த நிகழ்ச்சிகளைக் காட்சித்திரை வழிகாட்டிகள் மூலமோ தானியங்கி தொலைபேசி அமைப்புகள் மூலமோ நேரடிப் பயனர் தொடர்பாளர் மூலமோ வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இவ்வகையில் பொதுவாக திரைப்படங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் மனமகிழ்வு நிகழ்ச்சிகள் வழங்கப்படுகின்றன.
தமிழ் திரைப்படத்துறையில் முதன்முறையாக கமல்ஹாசன் நடித்து வெளியிட்டுள்ள விஸ்வரூபம் திரைப்படம் டிடிஎச் தொலைக்காட்சிகளில் காட்சிக்கு காசு முறைமையில் ரு.1000 ($ 18.2) கட்டணத்தில் பிப்.2இல் வெளியிடப்பட உள்ளது.[1]
சான்றுகோள்கள்தொகு
- ↑ "டிடிஎச்,ல் பிப். 2ம் தேதி விஸ்வரூபம் வெளியீடு : கமல் அறிவிப்பு". தினகரன் நாளிதழ். சனவரி 15, 2013. 2013-01-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. சனவரி 21, 2013 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்தொகு
- Capsule history at Museum of Broadcast Communications பரணிடப்பட்டது 2009-02-17 at the வந்தவழி இயந்திரம்