காட்டுப் பொறுப்பாண்மை அவை


எப்.எசு.சி எனச் சுருக்கமாக அறியப்படும் காட்டுப் பொறுப்பாண்மை அவை (Forest Stewardship Council) என்பது, ஒரு இலாப நோக்கற்ற, அனைத்துலக நிறுவனம் ஆகும். உலகின் காடுகளைப் பொறுப்பாக மேலாண்மை செய்ய்வதை ஊக்குவிப்பதற்காக இந் நிறுவனம் 1993 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தரக் கட்டுப்பாடுகளை விதித்தல், சுதந்திரமான சான்றுப்படுத்தல், காட்டு உற்பத்திப் பொருட்களுக்கு முத்திரையிடல் போன்ற நடைமுறைகளினூடாக இது தனது பணியைச் செய்ய்துவருகின்றது. இது உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் சமூகப் பொறுப்புணர்வுடனும், சூழலியல்சார் பொறுப்புணர்வுடனும் மேலாண்மை செய்யப்படும் காடுகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களைத் தெரிவு செய்வதற்கு வழி செய்கிறது.

காட்டுப் பொறுப்பாண்மை அவை
நிறுவப்பட்டது1993
தலைமையகம்பொன், செருமனி
வேலைசெய்வோர்ஆன்டரே கியாசினி டி பிரெயிட்டாசு
சேவை புரியும் பகுதிஉலகம் தழுவியது
Focusபேண்தகு காட்டு மேலாண்மை
வழிமுறைசான்றளிப்பு
இணையத்தளம்http://www.fsc.org/

காடழிப்புப் பிரச்சினை

தொகு

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு வேளாண்மை நிறுவனத்தின் கூற்றுப்படி, உலகின் அரைப்பங்கு காடுகள் ஏற்கெனவே மாற்றப்பட்டோ, தரம் குறைக்கப்பட்டோ, அழிக்கப்பட்டோ அல்லது பிற தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டோ விட்டது.[1] எஞ்சியுள்ள காடுகளிற் பெரும்பான்மையான காடுகளும்கூட சட்டத்துக்குப் புறம்பான மரம் வெட்டுதல், தரமற்ற மேலாண்மை போன்ற செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்றன. இவ்வாறான காடழித்தல் தொடர்பான உலகின் அக்கறையைத் தொடர்ந்தே காட்டுப் பொறுப்பாண்மை அவை நிறுவப்பட்டது.


 
காட்டுப் பொறுப்பாண்மை அவையின் சான்றளிப்பு முத்திரையுடன் கூடிய மரப் பலகை

காடுகளுக்கும், காட்டு உற்பத்திப் பொருட்களுக்குமாக உருவாக்கப்பட்ட உலகம் தழுவிய சான்றுப்படுத்தல் முறைமைகள் இரண்டில் இதுவும் ஒன்று. இந்தத் தன்னார்வப் பொறிமுறை, முந்திய பத்தாண்டுகளில் காடுகளின் மேலாண்மையை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஆர்வமூட்டக்கூடிய முன்முயற்சிகளுள் ஒன்றாகக் கணிக்கப்படலாம்.[2][3].


இந்நிறுவனத்தின், உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரப்பாடுகளின் படியான காட்டு மேலாண்மை, உள்ளூர் மற்றும் உலக சமுதாயங்களுக்கு தூய வளி, நீர் ஆகியவை உள்ளிட்ட சூழல்சார் சேவைகளை வழங்குவதுடன், தட்பவெப்ப மாற்றங்களை மட்டுப்படுத்துவதற்கும் உதவுகிறது. காட்டுப் பொறுப்பாண்மை அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ சட்டத்துக்குப் புறம்பாக மரங்களை வெட்டுதல், காடழிப்பு, புவி சூடாதல் முதலிய பிரச்சினைகள் மீது கவனம் செலுத்துகின்றது. அத்துடன், இது, பொருளாதார வளர்ச்சி, சூழல் பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு போன்ற நன்மையான தாக்கங்களுக்கும் காரணமாக உள்ளது.[4][5]


குறிப்புகள்

தொகு
  1. FAO facts and figures
  2. WWF - Responsible forestry: Certification
  3. The effects of FSC Certification in Estonia, Germany, Latvia, Russia, Sweden and the UK. WWF (2005)
  4. effects of FSC Certification in Estonia, Germany, Latvia, Russia, Sweden and the UK. WWF (2005)
  5. Experiences with voluntary standards initiatives and related multi-stakeholder dialogues. B. Lang. GTZ (2006)[1] பரணிடப்பட்டது 2007-06-21 at the வந்தவழி இயந்திரம்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு