காட்டு வாகை
காட்டு வாகை | |
---|---|
காட்டு வாகை மரம். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
துணைத்தொகுதி: | Mimosoidae
|
வகுப்பு: | |
வரிசை: | ஃபேபேலெஸ்
|
குடும்பம்: | ஃபேபேசேயே
|
பேரினம்: | Albizia
|
இனம்: | A. lebbeck
|
இருசொற் பெயரீடு | |
Albizia lebbeck |
காட்டுவாகை மரம் (Albizia lebbeck) நடுத்தரம் முதல் பெரிய அளவு கொண்ட மரம் ஆகும். இந்தியாவிலும் அதை அண்டிய துணைக் கண்டப் பகுதிகளிலும் இது நன்கு அறியப்பட்ட மரமாக விளங்குகிறது. Albizia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரம், அக் குடும்பத்தின் 100 வரையான இனங்களுள் ஒன்று.
காட்டுவாகை, இந்தியத் துணைக் கண்டம், வடகிழக்குத் தாய்லாந்து, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள தீவுகள் உட்பட்ட தென்கிழக்காசியாவின் சில பகுதிகள், வடக்கு ஆஸ்திரேலியப் பகுதிகள் என்பவற்றைத் தாயகமாகக் கொண்டது. எனினும் வெப்ப வலயப் பகுதிகளில் இது பரவலாகக் காணப்படுகின்றது. 600 தொடக்கம் 2500 மிமீ வரையான மழை வீழ்ச்சி கொண்ட பகுதிகளில் இது சிறப்பாக வளரக்கூடியது. எனினும் அதிலும் வரட்சியான இடங்களிலும் கூட இதனைக் காண முடிகின்றது.
பரவலாகக் கிளைத்து வளரக்கூடிய இம் மரம் 30 மீட்டர் விட்டம் வரை வளரக்கூடியது.
உசாத்துணைகள்
தொகுலோரி, ஜே. பி; பிரின்சென், ஜே. எச்; பாரோஸ், டி. எம்; Albizia lebbeck - a Promising Forage Tree for Semiarid Regions பரணிடப்பட்டது 2007-04-05 at the வந்தவழி இயந்திரம்