காணி மரநண்டு

காணி மரநண்டு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியூரா
குடும்பம்:
ஜிகேர்சினுசிடே
பேரினம்:
காணி
இனம்:
கா. மரஞ்சாண்டு
இருசொற் பெயரீடு
காணி மரஞ்சாண்டு
குமார், இராஜ் & என்ஜி, 2017

காணி மரநண்டு (Kani maranjandu) என்பது 2017-இல் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மரநண்டு ஆகும்.[1] இது நாள் வரை இந்நண்டு கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.[2][3]

இந்நண்டு வகைப்படுத்தப்பட்டுள்ள காணி என்னும் பேரினம் காணிக்காரர் என்னும் பழங்குடி இன மக்களைப் பெருமைப் படுத்தும் விதமாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2] கண்டுபிடித்தவர்கள் இதனை நிலநண்டுக் குடும்பத்தில் வகைப் படுத்தி உள்ளனர்.[1]

பரவல் தொகு

காணி மரநண்டு கேரளாவின் திருவனந்தபுர மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படுகிறது. இது ஒரு அகணிய உயிரியாகும்.[4]

பண்புகள் தொகு

நிலநண்டுக் குடும்பத்தில் இந்த நண்டுகளின் சில தனித்த பண்புகளினால் இவை தனிப் பேரினமாக அறியப்படுகின்றன. இவற்றின் தனித்தன்மை வாய்ந்த மேலோடு, மிக நீண்ட கால்கள், அலவன் (=ஆண் நண்டு) நண்டின் வயிறு போன்றவை இப்பேரினத்திற்கே உரியன.[1][3] இந்நண்டுகள் தங்கள் வாழ்நாளை மரங்களிலேயே கழிக்கின்றன. நீர்த்தேவைக்கு மரப் பொந்துகளில் இருக்கும் மழைநீரை நம்பியுள்ளன.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Biju Kumar, Appukuttannair; Raj, Smrithy; Ng, Peter K. L. (3 April 2017). "Description of a new genus and new species of a fully arboreal crab (Decapoda: Brachyura: Gecarcinucidae) from the Western Ghats, India, with notes on the ecology of arboreal crabs". Journal of Crustacean Biology. doi:10.1093/jcbiol/rux012. 
  2. 2.0 2.1 "New tree-living crab species found in Kerala". The Hindu. PTI. 4 April 2017. http://www.thehindu.com/news/national/new-tree-living-crab-species-found-in-kerala/article17809088.ece. பார்த்த நாள்: 2017-04-05. 
  3. 3.0 3.1 3.2 "New species of tree living crab found in Western Ghats". phys.org. 3 April 2017. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
  4. Rajesh, L.; Raj, Smrithy; Pati, S.K.; Biju Kumar, A. (2017). "The freshwater crabs (Decapoda: Brachyura) of Kerala, India". Journal of Aquatic Biology & Fisheries 5: 135, 140–141. http://keralamarinelife.in/Journals/Vol5-12/11%20Rajesh%20et%20al.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காணி_மரநண்டு&oldid=3330558" இலிருந்து மீள்விக்கப்பட்டது