காதர்பாட்சா முத்துராமலிங்கம்

காதர்பாட்சா முத்துராமலிங்கம் (Katharbatcha Muthuramalingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினராகவும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளராகவும் உள்ளார்.[1]

காதர்பாட்சா முத்துராமலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு8 ஆகத்து
மேலராமநதி இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்காதர் பாட்ஷா எசு. வெள்ளைச்சாமி
வாழிடம்(s)கமுதி, தமிழ்நாடு, இந்தியா
வேலைவிவசாயி
அரசியல்வாதி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

முத்துராமலிங்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான காதர் பாட்ஷா (எ) வெள்ளைச்சாமி மற்றும் ருக்மணி அம்மாள் ஆகியோரின் மகன் ஆவார்.[2]

அரசியல் வாழ்க்கை

தொகு

முத்துராமலிங்கம் 1996 முதல் 2016 வரை தொடர்ந்து 4 முறை மேலராமநதி ஊராட்சி ஒன்றிய தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

இவர் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 51.88% வாக்குகளுடன் இராமநாதபுரத்திலிருந்து (மாநில சட்டமன்றத் தொகுதி) தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][3] இவர் 2021-2022ஆம் ஆண்டிற்கான பொது நிறுவனக் குழுவின் உறுப்பினராக உள்ளார். இவர் ஆறாவது மாநில நிதி ஆணையத்தின் அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in.
  2. "Katharbatcha Muthuramalingam(DMK):Constituency- RAMANATHAPURAM(RAMANATHAPURAM) – Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 29 May 2021.
  3. "ராமநாதபுரம் தொகுதி: 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் வெற்றி!". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 10 June 2021.
  4. https://www.dinamalar.com/news_detail.asp?id=2805555