காதற்கடிதம்

எழுத்து வடிவில் அன்பின் வெளிப்பாடு
(காதல் கடிதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காதற்கடிதம் (Love letter) என்பது காதல் உணர்வுகளை எழுத்து வடிவத்தில் வெளிப்படுத்தி எழுதும் கடிதம் ஆகும். ஒருவர் தான் காதலிப்பவரிடம் இதனை நேரடியாகக் கொடுப்பார். அல்லது அஞ்சல் வழியாகவோ புறா மூலமாகவோ நண்பர் மூலமாகவோ அனுப்புவார்.[1] சில வேளைகளில் காதற்கடிதத்தை மறைவான ஓரிடத்தில் ஒளித்து வைத்து விடுவதுமுண்டு.[2] முதன்முறையாகக் காதலைத் தெரிவிப்பதற்காக மட்டுமன்றி, மனைவிக்கோ காதலிக்கோ கூடக் காதற்கடிதத்தை எழுதுவதுண்டு.[3] காதற்கடிதம் எழுதும் வழக்கம் தற்போது குறைந்து வருவதாகக் கூறப்படுகின்றது.[4][5]

மேரி பாட்டலி தின்மேனின் (Marie Spartali Stillman) காதலின் தூது ஓவியம்
சொகான்னெசு வெருமீரின் காதற்கடித ஓவியம்
காதற்கடிதத்தைத் திறப்பதைக் காட்டும் அமீடியோ மோமோ சிமொனெற்றியின் ஓவியம்

திரைப்படங்களில்

தொகு
  • 1991ஆம் ஆண்டில் வெளிவந்த சேரன் பாண்டியன் என்ற திரைப்படத்தில் சௌந்தர்யன் எழுதிய காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[6]
  • 1992ஆம் ஆண்டில் வெளிவந்த குணா என்ற திரைப்படத்தில் காதலன், காதலிக்கான கடிதத்தைக் காதலியைக் கொண்டே எழுதுவிப்பதாக, கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.[7] இப்பாடலை வாலி எழுதியிருந்தார்.[8]
  • 1995ஆம் ஆண்டு வெளிவந்த தேவா என்ற திரைப்படத்தில் வாலி எழுதிய ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[9]
  • 1999ஆம் ஆண்டு வெளிவந்த சோடி என்ற திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[10]
  • 2008ஆம் ஆண்டு, காதல் கடிதம் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகியது.[11]
  • 2010ஆம் ஆண்டு, 365 காதல் கடிதங்கள் என்ற பெயரில் ஒரு திரைப்படம் வெளியாகியது.[12]
  • 2013ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணா இலட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் கானா பாலா எழுதிய இலவு இலெற்றரு எழுத ஆசைப்பட்டேன் என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.[13]

இதனையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஜி. அசோக் (20 செப்டம்பர் 2012). "காதல் மாறவில்லை!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Daisy Greenwell (15 மார்ச் 2011). "Where to hide your love letters". The Times. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. "Whatever happened to love letters?". Mail Online. 11 அக்டோபர் 2002. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.
  4. Himay Zepeda (12 ஆகத்து 2014). "Why You Should Write Love Letters". Huffington Post. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.
  5. Rajyasree Sen (13 ஆகத்து 2015). "Missing love letters in the age of sexting and Snapchat". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.
  6. "காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு". பாடல். பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Rajshri Tamil (25 செப்டம்பர் 2009). "Kanmani Anbodu Kadhalan-Guna Tamil Song-Kamal Haasan, Roshini". YouTube. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. "Vaali Super Hit Numbers". Raaga. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.
  9. "Deva". Magnasound. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "Vairamuthu's Romantic Hits". Raaga. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.
  11. "2008ம் ஆண்டின் தமிழ் திரைப்பட கண்ணோட்டம்". தினமலர் சினிமா. 2 சனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.
  12. "365 Kadhal Kadithankal Tamil Movie". Spicyonion. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  13. "கண்ணா லட்டு தின்ன ஆசையா விமர்சனம்". தினகரன். Archived from the original on 2015-10-23. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2015.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதற்கடிதம்&oldid=3928768" இலிருந்து மீள்விக்கப்பட்டது