கானகத் தீ உமிழ்வுகள்

கானகத் தீ உமிழ்வுகள் (Wildland fire emissions) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலக உயிர்க்கோளத்தின் ஒரு பகுதியாக நிகழ்ந்து வருகின்றன.[1] முக்கியமாக வனப்பகுதி தீ உமிழ்வுகளில் பைங்குடில் வாயுக்களும் மனித ஆரோக்கியத்தையும் நலனையும் பாதிக்கும் பல மாசுகளும் கலந்துள்ளன.[2]

உமிழ்வுகள் உமிழ்வு கிராம்களில் /
எரிக்கப்பட்ட கிலோகிராம் எரிபொருள்
சதவீதம்
கார்பனீராக்சைடு 1564.8 71.44%
நீர் 459.2 20.97%
கார்பனோராக்சைடு 120.9 5.52%
வளிமண்டலத் துகள்மங்கள் <2.5μ 10.3 0.47%
நைட்ரிக் ஆக்சைடு 8.5 0.39%
மீத்தேன் 5.9 0.27%
ஆவியாகும் கரிமச் சேர்மம் 5.2 0.24%
கரிமக் கார்பன் 5.2 0.24%
மீத்தேன் அல்லாத நீரகக்கரிமம் 4.3 0.20%
வளிமண்டலத் துகள்மங்கள் > 10μ 3.8 0.17%
வளிமண்டலத் துகள்மங்கள் <10μ and >2.5μ 1.9 0.09%
தனிமநிலை கரிமம் 0.4 0.02%

தொழிற்புரட்சிக்கு முந்தைய சகாப்தத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் கானகத் தீ உமிழ்வுகள் விகிதாச்சார அளவில் 90 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற நில பயன்பாட்டு மாற்றங்கள் இந்த குறைவுக்கு 50 சதவிகித காரணமாகின்றன. நிலத்தை துண்டு துண்டாகப் பிரித்தல், நிலம் அடக்குமுறை நடவடிக்கை போன்ற நில மேலாண்மை முடிவுகள் பொன்றவை எஞ்சியிருக்கும் பிற காரணங்களாகும். தொழில்துறை உற்பத்தி, போக்குவரத்து, வேளாண்மை போன்ற மானுடவியல் நடவடிக்கைகளும் வனப்பகுதி தீயின் வளிமண்டல உமிழ்வுகளை மாற்றியமைத்தன [3] பின்வரும் விளக்கப்படங்கள் தொழிற்புரட்சிக்கு முந்தைய [4] கானகத் தீ உமிழ்வுகளை சமகால உமிழ்வுகளுடன் ஒப்பிடுகின்றன.[5][6]

பைங்குடில் வளிம உமிழ்வுகளுக்கு மேலதிகமாக உமிழப்படும் துகள்கள் மற்றும் வெளியிடப்படும் புகை ஆகியவை சூரிய கதிர்வீச்சை சிதறடிக்கலாம் அல்லது உறிஞ்சலாம். குறிப்பாக பனி அல்லது பனிப்பாறைகளில் சூரிய ஒளியைப் பாதிக்கின்ற வகையில் அவை படியலாம்.

மேற்கோள்கள் தொகு

  1. Pyne, S.J. 1995. World fire: The culture of fire on earth. University of Washington Press. 384 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-295-97593-8
  2. National Research Council: Committee on Air Quality Management in the United States, Board on Environmental Studies and Toxicology, Board on Atmospheric Sciences and Climate, Division on Earth and Life Studies (2004). Air Quality Management in the United States. National Academies Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-309-08932-8
  3. Leenhouts, B. 1998.Assessment of biomass burning in the conterminous United States. Conservation Ecology [online] 2(1): 1. [1] பரணிடப்பட்டது 2003-09-10 at the வந்தவழி இயந்திரம்
  4. Leenhouts, B. 1998. Assessment of biomass burning in the conterminous United States. Conservation Ecology [online] 2(1): 1. [2] பரணிடப்பட்டது 2003-09-10 at the வந்தவழி இயந்திரம்
  5. EPA. 1998. The National Air Pollutant Emission Trends: 1900-1997
  6. "Inventory of U.S. Greenhouse Gas Emissions and Sinks: 1990 - 1999". Archived from the original on 2010-06-01. பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானகத்_தீ_உமிழ்வுகள்&oldid=3449680" இலிருந்து மீள்விக்கப்பட்டது