கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
(கானாட்டம்புலியூர் பதஞ்சலீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். [1] தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 32வது தலம் ஆகும்.
தேவாரம் பாடல் பெற்ற கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கானாட்டுமுள்ளூர் |
பெயர்: | கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கானாட்டம்புலியூர் |
மாவட்டம்: | கடலூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பதஞ்சலீஸ்வரர் |
உற்சவர்: | சோமாஸ்கந்தர் |
தாயார்: | கோல்வளைக்கையம்பிகை |
தல விருட்சம்: | எருக்கு |
தீர்த்தம்: | சூர்யபுஷ்கரிணி |
ஆகமம்: | சிவாகமம் |
சிறப்பு திருவிழாக்கள்: | சிவராத்திரி, திருக்கார்த்திகை, அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | சுந்தரர் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்கள் |
அமைவிடம்
தொகுஇத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் கிராமம் வழியே 1 கிமீ சென்றடையலாம். மக்கள் வழக்கில் கானாட்டம்புலியூர் என்றழைக்கப்படும் இத்தலம் கொள்ளிடக்கரையில் உள்ளது. மிகப் பழைய கோயிலான இது பாழடைந்துள்ளது.
இறைவன், இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் பதஞ்சலிநாதர், இறைவி கானார்குழலி.