கான்ட் விளக்கப்படம்

கான்ட் விளக்கப்படம் அல்லது கான்ற் அட்டவணை என்பது கென்றி கான்ற் இனால் மேம்படுத்தப்பட்ட ஒரு செயற்திட்டப் பணிக் கூறுகளின் (terminal elements) கால அட்டவணையை எடுத்துரைக்கும் ஒரு வகை பட்டை விளக்கப் படம் ஆகும். கென்றி கான்ற், இந்த விளக்கப்படத்தினை 1910-1915 காலகட்டத்தினில் உருவாக்குகிறார்.[1][2] இது ஒரு பணிக் கூறு எப்போது தொடங்குகிறது, எப்பொழுது முடிகிறது, அதன் சார்புநிலைகள் எவை போன்றவற்றை காட்சிப்படுத்துகிறது.

கான்ற் விளக்கப்படம் மூன்று வகையான அட்டவணை சார்புகளையும் (சிவப்பு நிறம்) மற்றும் முடிக்கப்பட்ட பணிகளின் சதவீதங்களையும் குறிக்கின்றன.

விளக்கம்

தொகு

கான்ற் விளக்கப்படம் ஒரு வகையான செவ்வக விளக்கப்படம் ஆகும்[3][4], இது திட்டங்களை அட்டவணைப்படுத்துகிறது.[5] இந்த விளக்கப்படம் செங்குத்து அச்சில்(Y) செய்யப்படும் பணிகளையும், கிடைமட்ட அச்சில் (X) அதற்குண்டான கால அளவையும் பட்டியிலிடுகிறது. வரைபடத்தின் செவ்வகபட்டியின் அகலமானது ஒவ்வொரு பணியின் கால அளவை காட்டுகிறது.[6][7] கான்ற் விளக்கப்படம் திட்டத்தின் கீழுள்ள ஒவ்வொரு பணிகளின் ஆரம்ப மற்றும் முடிவு நாட்களை விளக்குகிறது. செயல்திட்டத்தின் பணி உடைப்பு கால அட்டவணையானது பணிப் பகுதிகளின் சுருக்கங்கள் மற்றும் இறுதிப் பகுதியை உண்டாக்குகிறது. நவீன கான்ற் விளக்கப்படம் செயல்பாடுகளுக்கிடையுள்ள சார்புநிலை (செயற்திட்ட மேலாண்மை) தொடர்புகளைக் காட்டுகிறது. கான்ற் வரைபடங்கள் திட்டத்தின் தற்போதைய நிலையினை அட்டவணைப்படுத்த, இன்றைய தேதியில் "TODAY" என்ற செங்குத்தான குறீயிட்டின் முலம் முடிக்கப்பட்ட சதவீதம் வண்ணங்களுடனும் காட்டப்படும். இந்த வரைபடம் சிக்கலான பணிகளை வரையறுத்தும் அதற்கு முன்னுரிமை அளிப்பதையும் காட்டுகிறது.

கான்ட் வரைபடங்கள் சிலநேரங்களில் பார் விளக்கப்படங்களுடன் ஒப்பிடப்படுகின்றன.[7][8]

கான்ட் வரைபடங்கள் தொடக்கத்தில் "முன்னதாக ஆரம்பிக்கும் கால முறையை" பயன்படுத்தி உருவாக்கப்படும், அங்கு முந்தைய பணி முடிந்தவுடன் அடுத்த பணி உடனே ஆரம்பிக்கும் வண்ணம் அட்டவணையிடப்பட்டிருக்கும். இந்த முறை கூடுதல் நேரத்தினை ஒவ்வொரு பணிக்கும் ஏற்படுத்தி தரும்.[3]

உதாரணம்

தொகு

பின்வரும் அட்டவணையில் 7 செயல்திட்டங்கள் உள்ளன, முறையே a முதல் g வரை பெயரிடப்பட்டுள்ளன. சில செயல்திட்டங்களை ஒரே நேரத்தில் செய்யலாம், முறையே (a & b) ஆகும். சில செயற்திட்டங்கள் முந்தைய திட்டங்கள் முடிந்தபொழுதே தொடங்க முடியும், உதாரணமாக (c and d திட்டங்களானது, a செயற்திட்டம் முடிந்தபிறகே தொடங்கமுடியும்). ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் முன்று கால அளவுகள் உள்ளன, திட்டமிடப்பட்ட கால அளவு (O), சராசரியான கால அளவு (M) மற்றும் திட்டமிடப்படாத கால அளவு (P). எதிர்பார்க்கப்படும் கால அளவானது(TE) பின்வரும் விதிமுறைகளை கொண்டு கணக்கீடப்படுகிறது(O + 4M + P) ÷ 6).

செயற்பாடுகள்/செயற்திட்டம் முந்தைய செயற்பாடுகள் அனுமானிக்கப்பட்ட கால அளவு எதிர்பார்க்கப்படும் கால அளவு (TE)
Opt. (O) Normal (M) Pess. (P)
a 2 4 6 4.00
b 3 5 9 5.33
c a 4 5 7 5.17
d a 4 6 10 6.33
e b, c 4 5 7 5.17
f d 3 4 8 4.50
g e 3 5 8 5.17

இதன் பிறகு ஒருவர் கான்ற் விளக்கப்படத்தினை வரையலாம்.

 
ஒர் கான்ற் விளக்கப்படம் மைக்ரோசாப்ட் செயற்பாடு பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. குறிப்பு (1) சிக்கலான பாதை முறை சிகப்பு நிறத்திலும், (2) சிக்கலற்ற பாதை முறை கறுப்பு நிறத்திலும், (3) சனி, ஞாயிறு விடுமுறை தினமாதலால் அட்டவணையிலிருந்து விலக்கபடுகிறது. கான்ற் விளக்கப்படத்தில், வார இறுதிநாட்களில் சில செவ்வகங்கள் நீளமாக இருக்கும்.

சான்றுகள்

தொகு
  1. Gantt 1910.
  2. Morris 1997, ப. 7.
  3. 3.0 3.1 Klein 1999, ப. 49.
  4. Richman 2002, ப. 97, 117, 276.
  5. Kumar, Pankaja Pradeep (2005). "Effective Use of Gantt Chart for Managing Large Scale Projects". Cost Engineering (Morgantown, WV: American Association of Cost Engineers) 47 (7): 13–21. பன்னாட்டுத் தர தொடர் எண்:0274-9696. இணையக் கணினி நூலக மையம்:209778284. 
  6. Richman 2002, ப. 117, 276.
  7. 7.0 7.1 Selig 2008, ப. 235.
  8. Flouris & Lock 2012, ப. 236, Chapter 12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்ட்_விளக்கப்படம்&oldid=2764729" இலிருந்து மீள்விக்கப்பட்டது