கான்பிலிக்கர் வைரசு
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
வைரஸ் என்றாலும் கதி கலங்கும் நமக்கு மேலும் நடுங்க வைக்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாக ஒவ்வொரு செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் சாதாரண மனிதர்களை காட்டிலும் புகழ்பெற்றுள்ளது கான்பி(லி)க்கர்.சி. மனிதர்களை பருவ நிலை மாற்றத்தின் போது நோய்கள் தாக்குவது போல குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கணினிகளை தாக்கும் வைரஸ்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் இந்த கான்பி(லி)க்கர் நாமெல்லாம் முட்டாள்கள் தினமன்று அனைவரையும் முட்டாள்களாக்க யோசித்துக்கொண்டிருக்கையில் நமது கணினிகளில் உள்ள விண்டோஸ் அடிப்படையிலான இயங்குதளங்களை குறிவைத்து தாக்கும்விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வைரஸ். இதை கணினி புழு என்று அழைக்கலாம்.
இதற்கு முன் வெளிவந்த கான்பி(லி)க்கர் வைரஸ் 1999-2001 காலகட்டங்களில் ஒரு கோடி கணினிகளை தாக்கி செயலிக்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயங்கும் விதம்
தொகுநமது கணினிகளில் இருந்து மற்ற கணினிகளுக்கு தகவல்களை பரிமாற்ற உதவும் ப்ரோட்டோகால்களின் (SMTP, IRC Port) வழியே நமது தகவல்களை களவாடவும், இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டு கணினிகளை செயலிழக்க வைக்கும் DDOS என்ற முறையின் கீழ் இது செயல்படும் என்று கூறப்படுகிறது.
அதோடு இந்த கணினிகளில் இந்த வைரஸ்கள் உள்நுழைந்தால் இயங்குதளங்களில் உள்ள windows update , windows security center, workstation போன்ற சர்வீஸ்களை முடக்கிவிடுகின்றன. இதனால் நமது கணினியில் பாதுகாப்பும், இயங்கு தளங்களின் மேம்பட்ட பாதுகாப்பு நீட்சிகளை இயக்க முடியாமல் போய்விடுகின்றன. இதனை பயன்படுத்தி நமது கணினிகளை மேற்கொண்டு செயலிழக்க வைக்கவும் முடியும்.
இந்த வைரஸ்கள் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகாப்பு குறைவாக உள்ள கணினிகளை வெகுஎளிதில் தாக்கும்.[1] இதோ இது குறித்து ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை
தடுக்கும் விதம்
தொகுஇந்த வைரஸ்கள் இயங்குவது மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை குறிவைத்துத்தான். எனவே இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்தில் பார்த்தபோது அங்கே அவர்கள் அளித்துள்ள செய்தி இன்னுமொரு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அப்படியென்ன அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் என்றால் இந்த கான்பி(லி)க்கர் வைரஸ்களை உருவாக்கியவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு இரண்டரை லட்சம் டாலர்களை வழங்க உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.ஓன்றே கால் கோடி.
இந்த பணத்தை பல்வேறு நிறுவனங்கள் இணைந்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விபரங்களுக்கு
http://www.microsoft.com/Presspass/press/2009/feb09/02-12ConfickerPR.mspx
வழிமுறை 1
இதோ மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அப்டேட் பைல் http://www.microsoft.com/technet/security/Bulletin/MS08-067.mspx
இதோ உங்கள் கணினிகளில் கான்பி(லி)க்கர் வைரசை நீக்கும் மென்பொருள். http://www.enigmasoftware.com/a1/download/cfremover.exe பரணிடப்பட்டது 2010-11-28 at the வந்தவழி இயந்திரம்
வழிமுறை 2
உங்களது கணினிகளில் வெளியாட்கள் உள் நுழையாமல் தடுக்க மற்றும் உங்களது அனுமதியின்றி உங்கள் தகவல்கள் வெளியே செல்லாம் இருக்க தீச்சுவர் எனப்படும் பயர்வால்களை பயன்படுத்துங்கள். இதோ சிறந்த மற்றும் இலவசமான சோன் அலாரம் வழங்கும் இலவச பயர்வால் http://www.zonealarm.com/ பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம் இந்த தளத்திற்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
மேலும் உங்களது கணினியில் உள்ள automatic update என்ற மென்பொருளை இயக்கி விண்டோஸ் வழங்கும் அனைத்து அப்டேட்களையும் பெற்றுக்கொள்ளுங்கள். வழிமுறை : 3
மேலும் உங்களது கணினி என்னென்ன பணிகள் செய்துகொண்டிருக்கின்றன என்பதை அறிய http://www.whatsrunning.net/whatsrunning/main.aspx பரணிடப்பட்டது 2009-02-26 at the வந்தவழி இயந்திரம் இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்.
இந்த மென்பொருளில் தற்போது உங்கள் கணினிகளில் என்னென்ன பைல்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த கணினியுடன் எந்த போர்ட் வழியாக இணைப்பில் உள்ளது அதனோடு தொடர்புடைய அனைத்து dll பைல்களையும் காணலாம்.
உங்களுக்கு சந்தேகமாக உள்ள கோப்புகளை அங்கேயே நீக்கும் வசதியும் உள்ளது.
முதல்கட்டமாக இந்த மென்பொருளை இயக்கி process என்ற பகுதியில் கணினி செய்துகொண்டிருக்கும் பணிகள் குறித்த விபரங்களை அப்படியே கீபோர்டில் உள்ள Print Screen என்ற பட்டனை பயன்படுத்தி ஓர் படமாக சேமித்திடுங்கள். எப்போதேல்லாம் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறீர்களோ அப்போது இந்த படத்தை பார்த்து இப்போது என்னென்ன பணிகள் புதிதாக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற தகவல்களை காணுங்கள். சந்தேகமாக இருந்தால் stop process என்ற கட்டளையின் மூலம் அந்த சந்தேகமான மென்பொருளை அங்கேயே நிறுத்தலாம்.
அடிக்குறிப்பு
தொகு- ↑ "http://mtc.sri.com/Conficker/addendumC/". Archived from the original on 2012-12-08. பார்க்கப்பட்ட நாள் 2009-04-25.
{{cite web}}
: External link in
(help)|title=