காபீர் கோட்
காபீர் கோட் (Kafir Kot) (உருது: کافرکوٹ; பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் அமைந்த தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் பாயும் சிந்து நதிக்கரையில் அமைந்த பைலட் செரீப் நகரத்தில் அமைந்துள்ளது. [1] காபீர் கோட்டில் கிபி ஏழாம் நூற்றாண்டு காலத்திய இந்து ஷாகி மன்னர்கள் எழுப்பிய இந்துக் கோயில்கள் இங்குள்ளது. 1915-ஆம் ஆண்டில் மியான்வலி மாவட்ட கெஜட் புத்தகத்தில், காபீர் கோட் பகுதிகளில் உள்ள தொன்மையான இந்து கோயில்களால், இப்பகுதி கணிசமான முக்கியத்துவம் மற்றும் பழமையான இந்து நாகரிகம் இருந்ததற்கான அறிகுறிகள் கொண்டிருந்தது எனக்குறித்துள்ளது. [2] It is located at 32°30'0N 71°19'60E[3]
காபீர் கோட் کافرکوٹ | |
---|---|
காபீர் கோட்டின் தொன்மையான இந்துக் கோயில்களின் சிதிலங்கள் | |
இருப்பிடம் | தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், கைபர் பக்துன்வா மாகாணம், பாகிஸ்தான் |
வகை | கோட்டைகள், விகாரைகள் |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி ஏழாம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | 1947 |
கலாச்சாரம் | இந்து ஷாகி |
இதனை [[இந்தியப் பிரிவினை|1947-இல் பாகிஸ்தான் விடுதலைக்கு] முன்னரே, பாகிஸ்தானியர்கள், இந்த இந்துக் கோயில் தொகுதிகளை, பாவிகளின் கட்டிடங்கள் என்ற பொருளில் காபீர் கோட் என அழைத்ததுடன், இந்த பழமையன இந்துக் கோயில் கட்டிடங்களை சிதைத்தனர்.
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள் காபீர் கோட்டின் சிதிலங்கள்
தொகுகாபீர் கோட் தொல்லியல் களத்தின் தொல் பொருட்கள் பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[4]